Advertisement

பூட்டை உடைத்து திருட்டு

அம்பத்துார்:வீட்டின் பூட்டை உடைத்து, திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக் கின்றனர். அம்பத்துார் அடுத்த மேனாம்பேடு, வ.உ.சி., நகர், 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு, 56; மாநகர பஸ் ஓட்டுனர். அவரது மனைவி பள்ளி ஆசிரியை.இவர்கள், நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், பணிக்கு சென்றனர்.மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைத்து, 11 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement