Advertisement

வாலிபருக்கு கத்திக்குத்து

சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, முக்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 20. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 28, என்பவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வழக்கம் போல், தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.


ஆத்திரமடைந்த சரவணன், தன் உறவினர்களுடன் சேர்ந்து, சதீஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, மது போதையில் இருந்த சரவணன், சதீஷ்குமாரை கத்தியால் தலையில் வெட்டி தப்பினார். அக்கம்பக்கத்தினர் சதீஷ்குமாரை காப்பாற்றி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement