Advertisement

தலைமை காவலர் மீது தாக்குதல்?

துரைப்பாக்கம்:பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்ட, துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர், சாலை ஓரம் காயத்துடன் கிடந்தார். அவர் தாக்கப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தரமணியைச் சேர்ந்தவர், புருஷோத்தமன், 42; துரைப்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போது, போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இரவு, 11:00 மணிக்கு, ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி அணுகு சாலையில், உடலில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். பொதுமக்கள், ஆம்புலன்சில், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.



மயக்கம் தெளிந்ததும், 'போதையில் வந்த மர்ம நபர்கள், கத்தியால் குத்தி விட்டு சென்றனர்' என, கூறி உள்ளார்.துரைப்பாக்கம் போலீசார், கந்தன்சாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது, புருஷோத்தமன் கூறியது போல், தாக்குதல் நடந்ததற்கான பதிவுகள் தெரியவில்லை. மது அருந்திய இடத்தில் தாக்கப்பட்டாரா, தாக்கிய நபர்கள் யார், பொய் புகார் கூறினாரா போன்ற கோணங்களில், துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement