Advertisement

சீனா - பாக்., கூட்டறிக்கை; இந்தியா நிராகரிப்பு

புதுடில்லி: சீனா - பாக்., கூட்டறிக்கையில், காஷ்மீரை, பிரச்னைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டதை நிராகரித்த இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா - பாக்., பொருளாதார பாதை அமைக்கவும், எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வ தேச அளவில், பாகிஸ்தான் புலம்பியது. ஆனால், பாக்., புலம்பலை யாரும் மதிக்கவில்லை.

கண்டனம்:



எனினும், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ள சீனா மட்டும், இந்த விஷயத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. சீனாவின் முயற்சியால், காஷ்மீர் விவகாரம் பற்றி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ரகசிய கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மற்ற நாடுகள், இந்தியாவுக்கு தெரிவித்த ஆதரவால், இந்த கூட்டம் பிசுபிசுத்தது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர், வாங் யி, சமீபத்தில், இரண்டு நாள் பயணமாக, பாகிஸ்தானுக்கு சென்றார். பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட, சீனா - பாகிஸ்தான் கூட்டறிக்கையில், காஷ்மீரை, 'பிரச்னைக்குரிய பகுதி' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில், எந்த சந்தேகமும் இல்லை. இதை, சர்வதேச நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்டுள்ளன. அதனால், காஷ்மீர் பிரச்னைக்குரிய பகுதி என, சீனா - பாக்., கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, இந்தியா நிராகரிக்கிறது.

முடியாது:



மேலும், காஷ்மீரில் ஒரு பகுதியை, பாகிஸ்தான், 1947ல் சட்ட விரோதமாக ஆக்கிரமித்தது. அந்தப் பகுதி, இந்தியாவுக்கு சொந்தமானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக, சீனா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட உள்ள பொருளாதார பாதை திட்டத்துக்கு, இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், வேறு எந்த நாடும் செயல்பட அனுமதிக்க முடியாது. அதனால், பொருளாதார பாதை அமைக்கும் திட்டத்தை, சீனா கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா

    முதலில் சீன பொருள்களை வாங்கி உபயோகிப்பதை நிறுத்தவும்.

  • prakashc - chennai,இந்தியா

    சுடலை இந்தியவிற்கு எதிராக பேசும் போது வயிறு எரிகிறது .

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    போட்டியாக ஹாங்காங்கை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியல்ல தாவாவுக்குட்பட்ட பகுதி என இந்திய அறிவித்தால் போயிற்று .இனி இதில் அடங்கியிருக்கத் தேவையில்லை .அடிக்கிற இடத்தைப்பொறுத்துதான் வலி தெரியும்

    • Darmavan - Chennai,இந்தியா

      திபெத்தும் சீனாவின் ஒரு பகுதியல்ல என்று நாம் அறிவிக்க வேண்டும்

  • blocked user - blocked,மயோட்

    சீனாவுக்கு ஆப்பு பொருளாதாரம் மூலம் ஏற்கனவே ஆண்டவன் வைத்து விட்டான். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட சீனாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கம்மிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தால் நிலைமை சீராகும்.

Advertisement