Advertisement

முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்: ஸ்டாலின்

சென்னை: வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டால், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, பாராட்டு விழா நடத்த தயார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: வெளிநாடுகளின் முதலீடுகளை பெறப் போகிறோம் என்று கூறி, வீராப்புடன் சென்ற முதல்வர், இ.பி.எஸ்., வெறுங்கையுடன் திரும்பி இருக்கிறார். அவரது பயணம், மன ரீதியாக கோணலை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை அறிக்கைஇதனால், விரக்தியின் உச்சிக்கே சென்று, 'தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால், ஸ்டாலின், என் மீது எரிச்சல் மற்றும் பொறாமையுடன் பேசி வருகிறார்' என, கூறியிருப்பது, பாடத் தெரியாமல், பக்க வாத்தியத்தில் குறை கூறியது போல உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை போடப்பட்டுள்ள, 433 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; எத்தனை தொழிற் நிறுவனங்கள், எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளன என்ற, வெள்ளை அறிக்கையை வெளியிட தயாரா? அப்படி உண்மைகளை வெளியிட்டால், தி.மு.க., சார்பில், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு ஒரு வாரத்தில், பாராட்டு விழா நடத்த தயார். இரண்டு நாட்களில், தமிழக மக்களுக்கு பதில் வேண்டும். இல்லாவிட்டால், வெளிநாடு பயணம், மர்மங்கள் நிறைந்தது என்பது உறுதியாகி விடும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலினுடன் சந்திப்பு:



தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டு, சுயதொழில் நடத்தி வரும், 15 பேர், சென்னை அறிவாலயத்தில், நேற்று ஸ்டாலினை சந்தித்து, மனு அளித்தனர். அம்மனுவில், 'கொத்தடிமையாக இருந்து மீட்கப்படும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஒரு முனைத் திட்டத்தின் கீழ் வழங்க, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, குறிப்பிடப் பட்டிருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஏன் பாராட்டு விழா ?வெள்ளரிக்கா வாங்கவா?

  • madhavan rajan - trichy,இந்தியா

    ராகுலுக்கு பாராட்டு விழா எல்லாம் எடுத்தாச்சா? பெரிய வெற்றியை தேடித்தந்த உங்களுக்கு உங்கள் கட்சி ஆட்கள் எப்போது பாராட்டு விழா நடத்தப் போகிறார்கள். பொய் சொல்லியே மக்களை ஏமாற்றும் உங்களுக்கு பாராட்டு விழா மிகவும் அவசியம்.

  • Sanjay - Chennai,இந்தியா

    பைத்தியம் முத்தி போச்சு

  • Sanjay - Chennai,இந்தியா

    சொடலையை பார்த்தால் ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தில் வரும் பிம்பிளிக்கி பிளாக்கி என்று கூறுபவர் போல் இருக்கிறார்.

  • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

    உமக்குத்தான் பாராட்டு விழா நடத்த வேண்டும். அரசியல் கட்சி தலைவர்களிலேயே, பிட் பார்த்து தப்பாக படிக்கும் முதல், ஒரே தலைவர் நீர்தான். உமக்கு கிண்டல் வேற வேணுமா?

Advertisement