Advertisement

அடுத்தடுத்து கைதாகும் தலைவர்கள்; கலகலக்கிறது காங்கிரஸ்

புதுடில்லி: காங்.கின் முக்கிய தலைவர்களான சிதம்பரம், டி.கே.சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கையோடு, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தை வளைப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் அக்கட்சி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கடந்த 1984ல் முன்னாள் பிரதமர் இந்திராவின் படுகொலையை அடுத்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த பெரும் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை முன்னின்று நடத்தியதாக கூறி காங். தலைவர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார் இருவர் மீதும் வழக்குகள் பாய்ந்தாலும் ம.பி. முதல்வர் கமல்நாத்துக்கும் இதில் பங்கிருப்பதாக அப்போதிருந்தே குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டில்லி கலவரம் தொடர்பாக மொத்தம் ஏழு வழக்குகள் இருந்த நிலையில் மூன்று வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தன; நான்கு வழக்குகள் போதுமான சாட்சிகள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு விட்டன. இருந்தாலும் சீக்கிய அமைப்புகள் இவ்விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியபடியே இருந்தன. குறிப்பாக அகாலிதள தலைவர் மஜ்ஜிந்தர் சிர்ஸா இவ்விஷயம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் திரும்ப திரும்ப கோரிக்கை வைத்தபடியே இருந்தார்.

இதையடுத்து மூடப்பட்ட நான்கு 4 வழக்குகளை மீண்டும் விசாரிக்க இரு தினங்களுக்கு முன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. இதனால் டில்லி கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு தற்போது கமல்நாத்துக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறி விசாரிக்க தயாராகி விட்டது. டில்லி குருத்வாரா ரகாப்கஞ்ச் எதிரே நடந்த வன்முறையின் போது கமல்நாத் இருந்தார்; வன்முறையை அவர் தான் முன்னின்று நடத்தினார்; அவர் முன்பாக இரண்டு கொலைகள் நடந்தன' என சாட்சி சொல்வதற்கு அப்பகுதியைச் சேர்ந்த இருவர் முன்வந்துள்ளனர்.

பா.ஜ., ஆட்சி தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் சாட்சி சொல்ல முன் வருவதால், 'இருவருக்கும் உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கிட வேண்டும்' என மஜ்ஜிந்தர் சிர்ஸா தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜரான கமல்நாத் தான் அந்த இடத்தில் இருந்ததை ஒப்புக் கொண்டாலும் அனைவரையும் அமைதிப்படுத்தும் பணியை மட்டுமே செய்ததாக கூறியிருந்தார்.இந்த ஒப்புதல்தான் அவருக்கு எதிராக திரும்பலாம் என தெரிகிறது.

இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் கமல்நாத்துக்கு சிறப்பு புலனாய்வுக்குழு ஓரிரு நாளில் 'சம்மன்' அனுப்பும் என தெரிகிறது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தாங்கள் ஆளும் முக்கியமான மாநிலத்தின் முதல்வரான கமல்நாத்தும் வளைக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  எல்லாவனும் பாஜகவுக்கு போயி சேர்ந்துடுவானுவோ..

 • Nallavan Nallavan - Dhanbad,இந்தியா

  அவன் யோக்கியனா இருந்தா சட்டத்தின் உதவியுடன் வெளியே வரட்டுமே ??

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கைது பற்றி பேச்சு மூச்சே இல்லை. சூப்பர்

 • Ramaraj P -

  காற்று மறுபக்கம் திரும்பி அடிக்கின்றது. காலம் மாறிவிட்டது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இது வந்து நாலு நாட்கள் ஆறது.

Advertisement