Advertisement

டவுட் தனபாலு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை தராமல், அரசியலில் இருந்து அவரை ஓய்வு பெற வைக்கும் வகையில், கவர்னர் பதவி தந்தது ஏன் என தெரியவில்லை.

டவுட் தனபாலு: அந்த அம்மா, துாத்துக்குடி லோக்சபா தேர்தலில் நின்றபோது, வெற்றி பெற வைத்திருந்தால், அவரை மத்திய அமைச்சராக்க நினைக்கும் உங்கள் விருப்பம் நிறைவேறியிருக்கும். அவரை தோற்டிக்க, நீங்களும், உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களும் தானே, முழு வீச்சில் பிரசாரம் செய்தீர்கள். திடீரென, அந்த அம்மா மீது, உங்களுக்கு எப்படி பாசம் வந்தது என்பது தான், 'டவுட்' டா இருக்கு!

***

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: பிரதமர் மோடி, 100 நாள் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார். ஆனால், மக்கள் அனுபவிப்பதோ, வேதனை பட்டியல்.

டவுட் தனபாலு: வர வர, 'ரைமிங்கா' பேசி, கலக்குறீங்க சார்... இவ்வளவு பேச்சுத் திறமையுள்ள உங்களால், விக்கிரவாண்டியிலோ, நாங்குநேரியிலோ நடக்கயிருக்கும் இடைத்தேர்தலில், தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பது தான், என்னோட, 'டவுட்!'

***

அ.ம.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி: தினகரனை ஊர் ஊராக அழைத்துச் சென்று, மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே நான் தான்.

டவுட் தனபாலு: இவ்வளவு செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியா உங்களை முன்னிலைப்படுத்திக்கிற நீங்க, ஓசூர் இடைத் தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டு, 'நோட்டா'வை விட குறைவாக, வெறும், 1,432 ஓட்டு வாங்கியது எப்படீங்கிற, 'டவுட்' டுக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

Advertisement