ஆறுகளை பாதுகாக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம்
குன்னுார்:'ஆறுகளை பாதுகாக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம்,' என, தெரிவிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், குன்னுார் ஆறு பாதுகாப்பு கூட்டாண்மை சமூக பொறுப்பு செயல்பாட்டின் மூலம், 'செயின் லிங்க் வேலி' அமைக்கும், 2ம் கட்ட பணி நிறைவு விழா, நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், ''குன்னுார் நகராட்சி தூய்மைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 'கிளீன் குன்னுார்' அமைப்பின் மூலம் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்க, வி.பி., தெரு வரை, 398 மீட்டர் நீளத்திற்கு 7 முதல் 9 அடி உயரம் வரையில் 'இஸ்பிரவா ஹோம்ஸ்' நிறுவன கூட்டாண்மை சமூக பொறுப்பு சார்பில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில், 'செயின் லிங்க் வேலி' அமைக்கப்பட்டுள்ளது.''ஆறு, நீரோடை, சதுப்பு நிலங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார். குன்னுார் எம்.எல்.ஏ., சாந்திராமு பேசினார். விழாவில், இஸ்பிராவ் ஹோம்ஸ் சமூக பொறுப்பு குழுவை சேர்ந்த தர்ஷன் ஷா, கோத்ரெஜ் குழுமம் மேலாண்மை இயக்குனர் நாதிர் கோத்ரேஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!