Advertisement

உண்டியல் பணத்தில் விநாயகர் பிரதிஷ்டை: ஒற்றுமையை வெளிப்படுத்திய சிறுவர்கள்

பேரூர்:தற்போதைய நவீன காலத்தில், தங்கள் பாரம்பரியம், பண்பாடு, விழாக்களின் முக்கியத்துவம் குறித்து, பலரும் மறந்து வரும் நிலையில், வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த, 5 - 14 வயதுடைய 15 சிறுவர்கள், தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தில், விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, தங்கள் ஒற்றுமையை பறைசாற்றிய சம்பவம், நேற்று நடந்தது.
சிறுவர்கள் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தி எங்கள் பண்டிகை. பெரிய அண்ணன்கள், ஒற்றுமையுடன் ஆண்டுதோறும் கொண்டாடுவதை பார்த்து வந்த எங்களுக்கு, நாமும் சிலை வைத்தால் என்ன என தோன்றியது. இதோ, எங்கள் உண்டியல் பணத்தில், ரூ.1500க்கு, 5 விநாயகர் சிலைகள் வாங்கி விட்டோம். இத்துடன், களிமண்ணில் சிறிய விநாயகரை நாங்களே செய்தோம்' என்றனர்.அத்தோடு விட்டார்களா.. இவர்களின் தகுதிக்கு ஏற்ப, சீரியல் செட் அமைத்து பந்தலிட்டனர். ஹோம குண்டம் வளர்த்து, விநாயகப்பெருமானை பிரதிஷ்டையும் செய்து விட்டனர்.'பெரிய அண்ணன்கள் போன்று, 'பிளக்ஸ்' வைக்கலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், அந்த பணத்தில், 50 பேருக்கு அன்னதானம் செய்து விட்டோம். அடுத்த வருஷம், பெரிய அளவில் விழா நடத்தி, எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்' என, கோரசாக கூறி பிரமிக்க வைத்தனர்.இந்த சிறு வயதிலேயே, தங்கள் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடன் விழா நடத்திய இச்சிறுவர்களுக்கு, ஒரு பெரிய சபாஷ்!பெரிய அண்ணன்கள் போன்று, 'பிளக்ஸ்' வைக்கலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், அந்த பணத்தில், 50 பேருக்கு அன்னதானம் செய்து விட்டோம். அடுத்த வருஷம், பெரிய அளவில் விழா நடத்தி, எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement