Advertisement

புதுச்சேரியில் சாமியார் அடித்து கொலை

Share
புதுச்சேரி: புதுச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த, தத்துவ போதானந்தா சுவாமி, மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி அண்ணாமலை நகர் மொட்டைத்தோப்பு கோகுலம் குடியிருப்பில், கீழ்தளத்தில் வசித்து வந்தவர் தத்துவ போதானந்தா சுவாமி, 60. ஒதியம்பட்டில் ஆசிரமம் நடத்தினார்; விநாயகர் கோவில் நிர்வாகியாகவும் இருந்தார். கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளரான இவர், குடியிருப்பின் கணக்கு வழக்குகளையும் கவனித்து வந்தார்.குடியிருப்பில் நேற்றுமுன்தினம் இரவு, திண்டிவனம் முப்புளியை சேர்ந்த காவலாளி ஆறுமுகம் (55), பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த அறிமுகமில்லாத இருவர், தண்ணீர் கேட்டு, ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்த ஆறுமுகம், தப்பிச் சென்று, 45 அடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இரவு முழுவதும் துாங்கி உள்ளார்.அதிகாலை 5.௦௦ மணியளவில் குடியிருப்புக்கு அவர் வந்தபோது, வாசலில் இருந்த குழாய் அடியிலும், காரிலும் குங்கும கறை காணப்பட்டது. இதுகுறித்து, கோரிமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. வடக்கு எஸ்.பி., ஜிந்தாகோதண்டராமன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் உள்ளிட்ட போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.குளியலறை வாயிலில், நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் தத்துவ போதானந்தா சுவாமி, இறந்து கிடந்தார். சிறிது துாரம் ஓடிய மோப்ப நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.குடியிருப்பு நுழைவாயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா, சில நாட்களாக பழுதடைந்துள்ளது. எனவே, அக்கம் பக்க வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி, குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.புதிய செக்யூரிட்டிசெக்யூரிட்டி ஆறுமுகம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். நள்ளிரவில் இருவர் தாக்கியபோது போலீசுக்கும், செக்யூரிட்டி நிறுவனத்திற்கும் தெரிவிக்காமல், வேறு இடத்திற்கு சென்று இருந்து விட்டு, விடியற்காலையில் திரும்பியுள்ளார். அவர் உடனடியாக தகவல் தெரிவித்து இருந்தால், குற்றவாளிகள் சிக்கியிருப்பர் என போலீசார் தெரிவித்தனர்.சொத்துக்காக கொலையா?தத்துவபோதானந்தா சுவாமிகள், மதுரையை பூர்வீகமாக கொண்டவர், பொறியியல் பட்டதாரி. ஆன்மிகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக, துறவறம் பூண்டு தனிமையில் வாழ்ந்து வந்தார். கோவில்களில் உபன்யாசம், இந்து முன்னணி கூட்டங்களில் சொற்பொழிவாற்றி வந்துள்ளார். தன்னை நாடி வந்தவர்களுக்கு ஜோதிடம், பரிகாரம் சொல்வார்.இவருக்கு சொந்தமாக வீடும் சில சொத்துக்களும் உள்ளது. தற்போது வசித்து வந்த அப்பார்ட்மென்டை விற்பதற்காக பலரிடம் பேசி வந்துள்ளார். மேலும், குடியிருப்பின் அருகே நள்ளிரவில் கஞ்சா, மது போதையில் சிலர் சுற்றி வந்ததை, இவர் கண்டித்து வந்துள்ளார். இதன் பின்னணிகளில் அவர் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement