Advertisement

அரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம்

புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டில்லியில் உள்ள நிகாபோத் காட் மயானத்தில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, நேற்று(ஆக.,24) மதியம், 12: 07 மணிக்கு, அருண் காலமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



இதனை தொடர்ந்து, இன்று அவரது உடல் டில்லியில் உள்ள பா.ஜ.,தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர், அங்கிருந்து வாகனத்தில் ஊர்வலமாக யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போதி காட் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. இதன் பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்கிட, முழு அரசு மரியாதையுடன் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜெட்லியின் சிதைக்கு, மகன் ரோஹன் தீமூட்டினார்.

வெங்கையா கண்ணீர்






இறுதிச்சடங்கில், ஜெட்லி மனைவி சங்கீதா, மகள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராம்விலாஸ் பஸ்வான், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், கலந்து கொண்டனர். ஜெட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா கண்ணீர் விட்டு அழுதார். இறுதிச்சடங்கின் போது டில்லியில் மழை பெய்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16 + 3)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் பத்திரிகையில் ஜெட்லீ இறந்த செய்திக்கு வாசகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மிக கண்ணியமாக இருக்கின்றன ...ஆப்பு போன்ற நபர்களின் கருத்துக்கள் கண்ணியமில்லாமல் இருக்கின்றன ...

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    தாண்டவக்கோன் சொல்றார் ... India's economy in deathbed now..... என்று கருத்து சொல்லறார் ....கலியாணம் பண்ணினா என்ன சொல்வார்

  • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ஜெட்லீ ஜி உங்களின் மறைவு கண்ணீரை வரவளித்துள்ளது, சூசை எஞ்சியுள்ள காலங்கள் இந்தியாவுக்காக வாழுங்கள், உங்களை இந்தியா தோளில் சுமந்து கொண்டாடும்.சூசை அவர்களே கண்ணீருடன் சித்தப்பு என்றழைக்கிறேன் இந்தியா நமது, முஸ்லீம் கிறிஸ்டின் ஹிந்து என்று எங்களை பிரிக்காதீர்கள், எங்கள் பூணலை அறுக்காதீர்கள், தேசத்தை போற்றுங்கள், உங்களை தேசம் கொண்டாடும், துரோகம் செய்யும் மார்க்க தலைவர்களை கடுமையான தண்டனை அளியுங்கள், சைக்கோ குருமா எஸ்ரா etc தூக்கி எறியுங்கள், செய்வீர்களா 😭😭😭

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    India's economy in deathbed now.

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      When honorable singh was ruling India, the prices of common man's daily need were nearing Mars.

  • ஆப்பு -

    அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். ஆனா கடைசி வரை அந்த 150 லட்சம் கோடி கருப்பு பணம் வெளியே கொண்டு வர்ரதை பாக்காமலே போயிட்டாரு.

ஜெட்லியின் இறுதிச்சடங்கு (2)

  • mannandhai - ,

    RIP. Good bye.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    தேசப்பணிக்காக அந்நியப்பயணம் சென்றுள்ள மோதிஜி அதனை நிறுத்திவிட்டு தகனத்துக்கு வரவேண்டாம் என அருண் ஜெட்லியின் குடும்பம் சொன்னது நெகிழ்ச்சியாக உள்ளது .மற்றவர்களாக இருந்தால் வாக்குவங்கிக்காக சவ ஊர்வலத்தைப் பயன்படுத்தியிருப்பர்

ஜெட்லியின் இறுதி ஊர்வலம் (1)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    MAY HIS SOULD REST IN PEACE. MY HEART FELT CONDOLENCE TO HIS FAMILY MEMBERS

Advertisement