Advertisement

ஆர்வமில்லை!சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க..100நாள் பணியாளர் மூலம் தீர்மானம் நிறைவேற்றம்

செங்குன்றம்:வழக்கம் போல், கிராம சபை கூட்டங்களில், பொதுமக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், 100 நாள் வேலை செய்பவர்கள் மூலம், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
தமிழகம் எங்கும், 'ஜல் சக்தி அபியான்' திட்டம் மூலம், நீர்நிலை பாதுகாப்புக்காக, நேற்று காலை, 11:00 மணி அளவில், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன. புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புள்ளிலைன், அழிஞ்சிவாக்கம், தீர்த்தகிரையம்பட்டு, வடகரை, கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம் ஆகிய, ஏழு ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னன் தலைமையில் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற செயலர்கள், ஊர்நல அலுவலர்கள் மற்றும் 100 நாள் வேலை செய்யும் பெண்கள், வழக்கம் போல் பங்கேற்றனர். கூட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மேலும், குளம் துார் வாருதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement