Advertisement

தொழில் துவங்க வங்கி கடன்: ஆக.30 நேர்காணல்

தேனி : இளைஞர்கள் வங்கி கடன் பெற்று தொழில் துவங்க ஆக. 30 ம்தேதி சிறப்பு நேர்காணல் நடத்தப்படுகிறது.


மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் துவங்குவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 25 சதவீத மானியத்தில் வங்கி கடன் வழங்கப்படும். இந்த ஆண்டு 90 பேர் தொழில் முனைவோருக்கு ரூ.45 லட்சம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீடு, உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் கடனுதவி பெறுவோர் 8 ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினர், திருநங்கைகள், சிறுபான்மையினர் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இத் திட்டத்தில் 25 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படும். இதில் பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளலாம்.


திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http://www.msmeonline.gov.in/uyegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, 2 விண்ணப்பநகலுடன் பள்ளி, கல்லுாரி, மாற்று சான்றிதழ் நகல்கள், ரேஷன் கார்டு நகல், ஆதார், திட்ட அறிக்கை, அசல் மற்றும் நகல், ஜி.எஸ்.டி., எண் கொண்ட விலைப்பட்டியில், அசல், நகல்களை இணைந்து ஆக. 29 ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆக., 30 ம்தேதி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவ் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement