Advertisement

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பிரசாரம்

Share
தேனி : தேனியில் '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர்.


தேனி மாவட்டத்தில் விபத்து, ஆபத்துக்களில் பாதிக்கப்படுவோரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு வர '108' ஆம்புலன்ஸ்கள் 19 உள்ளன. இவற்றில் ஒரு வாகனத்திற்கு தலா 4 பேர் வீதம் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆம்புலன்ஸ்களும் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 பேரை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கின்றனர். 10 மணிநேரம் வேலை செய்கின்றனர். ஆனால் குறைந்த ஊதியமாக மாதம் ரூ. 13 முதல் ரூ.14 ஆயிரம் பெறுகின்றனர்.


அரசு '108' சேவை வழங்கும் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீத சம்பள உயர்வு வழங்க கோரி நிதி மொத்தமாக வழங்குகிறது. ஆனால் அந்நிறுவனம் தங்களுக்கு சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்குவதில்லை என தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனை விளக்கி நேற்று தேனியில் '108 'ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஜெயப்பாண்டி, பொருளாளர் மாரிச்சாமி ஆகியோர் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை முறையீடும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழங்கினர். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை நிர்வாகம் எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement