Advertisement

போதை பாக்கு விற்பனை  பெரியகுளத்தில் அமோகம்

பெரியகுளம், : பெரியகுளம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை உள்ளிட்டவை விற்பனை தாரளமாக நடக்கிறது.


பெரியகுளம், வடுகபட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, லட்சுமிபுரம் பகுதிகளில் போதை பாக்கு, புகையிலை விற்பனை களைகட்டியுள்ளது. அவ்வப்போது கண்துடைப்பாக சோதனை நடத்தும் அதிகாரிகள், நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில்லை. பெங்களூருவில் இருந்து லாரிகளில் மூடை, மூடையாக அவற்றை மொத்த வியாபாரிகள் பெரியகுளம் பகுதிகளில் வாங்கி இருப்பு வைத்துள்ளனர். சில மளிகை கடைகளிலும், பல பெட்டிகடைகளிலும் விற்பனை களைகட்டியுள்ளது. நகராட்சி மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மொத்த வியாபாரிகளிடம் சோதனை நடத்தி பறிமுதல் செய்து விற்கும் கடைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement