Advertisement

சொத்து உரிமைச்சான்று பெற உத்தரவு! இ-சேவை சான்றிதழே செல்லும்

திருப்பூர்:'இ-சேவை' மையத்தில் பெறும் சொத்துரிமை சான்று மட்டுமே செல்லுபடியாகும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் பல்வேறு சலுகைகளை பெற, சில வகை சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இருப்பிடம், வருமானம், ஜாதி சான்று போன்ற சான்றிதழ்களை, வருவாய்த்துறையில் பெற்று வழங்கினால் மட்டுமே, அரசு உதவி கிடைக்கிறது.
கோர்ட் ஜாமீன் வழங்குவது உட்பட, பல்வேறு தேவைகளுக்கு, சொத்து உரிமைச்சான்று அவசியமாகிறது. சொத்து உரிமைதாரர், வருவாய்த்துறையில், சொத்து உரிமைச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.சொத்துரிமை சான்று யார் வழங்குவது என்ற குழப்பம், பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
அதற்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு வழங்கியுள்ளது. அதன்படி, 'பொது 'இ-சேவை' மையத்தில் பெறப்படும் சொத்துரிமை சான்று மட்டுமே, செல்லு படியாகும்; மற்றபடி, காகிதத்தில் பெறப்படும் சான்றுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியம், வங்கி கடன் தேவைகளுக்கு, அதிக அளவில், சொத்துரிமை சான்று பயன்படுத்தப்படுகிறது. அவசர தேவைகளுக்காக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரிடம், சொத்துரிமை சான்று பெற்று வந்தனர்.
அதாவது, வருவாய்த்துறை வழங்கும் சிட்டா, அடங்கல் விவரம், வருவாய்த்துறையின் அங்கீகாரம் பெற்றவை. அப்படியிருக்க, உரிமைச்சான்று கோருவது தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிக்கு, உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,'தற்போதைய நிலவரப்படி, 'இ-சேவை' மையம் மூலமாக பதிவு செய்து வழங்கும், சான்றிதழ்கள் மட்டுமே செல்லுபடியாகும்.மற்றபடி, அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம், கையொப்பத்துடன் காகிதத்தில் பெறும் சான்றிதழ் செல்லுபடியாகாது.வருவாய்த்துறை முடிவுப்படி, பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியம் மற்றும் வங்கியாளர்கள், சான்றிதழ் பெறுவதை மாற்றி கொள்ள வேண்டும்,' என கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement