Advertisement

டவுட் தனபாலு

Share
தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா: எதை இலக்காக கொண்டு, கட்சி துவங்கப்பட்டதோ, அந்த இலக்கை, அடைந்தே தீருவோம்.


டவுட் தனபாலு: கட்சி துவக்கி, பதினாலு வருஷமாச்சு... உங்க நோக்கம் என்ன; இலக்கு என்ன என்பதை, மக்கள் மறந்திருப்பாங்க... அதை மீண்டும் நினைவுபடுத்தினால் என்ன... கூட்டணியில் இருக்கும்போது, அதைப் பற்றி பேசக் கூடாது என்ற, கொள்கை முடிவு எதுவும் எடுத்திருக்கீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!


தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு: தமிழகத்தில், 'நீட்' தேர்வை அமல்படுத்த, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றவர், சிதம்பரத்தின் மனைவி நளினி. அவரது குடும்பத்தினர், தமிழக மக்கள் பற்றி எப்போதுமே சிந்திப்பதில்லை.


டவுட் தனபாலு: நளினி சிதம்பரம், வக்கீல்... தொழில் அடிப்படையில், 'நீட்' தேர்வை ஆதரித்து, அவர் வாதாடி இருக்காரு... இது தவறுன்னா, 'நீட்' தேர்வை கொண்டு வந்து, அதற்கு ஆதரவாக, மத்திய அரசும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டும் என்னவாம்... இதை, ஏன் பேச மறுக்குறீங்க... யார் பொல்லாப்புக்கு பயப்படுறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'

பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: கடந்த முறை, மாநிலம் முழுவதும் பெரும் வித்தியாசத்தில், தி.மு.க.,வை ஜெயிக்க வைத்த மக்கள், இம்முறை, வேலுாரில், வெறும், 8,000 ஓட்டு வித்தியாசத்தில் தான், வெற்றியைக் கொடுத்துள்ளனர். எனவே, தி.மு.க.,வின் வீழ்ச்சிக்கு, இது ஒரு துவக்கம்.


டவுட் தனபாலு: இதை எல்லாம், இவ்வளவு கணக்குப் போட்டுப் பார்க்குறீங்க... அதே நேரத்தில், வேலுார் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ.,வினரை அழைக்காமல், அவர்களின் நேரடியான பங்களிப்பு இல்லாமல் தானே, அ.தி.மு.க., தேர்தலை சந்தித்தது... இதை, அ.தி.மு.க.,வின், தனி ஆவர்த்தனத்தின் துவக்கம்னு பார்க்கலாமா என்ற, 'டவுட்'டுக்கு, என்ன பதில் சொல்வீங்க...!இ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன்: ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நதி நீர் ஆணையம், ஒரே கல்விக் கொள்கை, ஒரே மொழி எனக் கூறி, கடைசியில், ஒரே நாடு, ஒரே கட்சி என்ற நிலையை நோக்கி, பா.ஐ., செல்கிறது.


டவுட் தனபாலு: எதுவும் ஒன்றாய் இருப்பது உங்களுக்கு பிடிக்காதுன்னு சொல்லுங்க... ஒரு காலத்தில், 'ஆஹா ஓஹோனு' இருந்த உங்க கட்சி, இன்றைக்கு, ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெறவே, கூட்டணி கட்சிகளின் உதவியை நாடும் அளவுக்கு போயிடுச்சே... உங்க கட்சியை வளர்க்க முடியாத நீங்க, அடுத்த கட்சி வளர்வதை இவ்வளவு பொறாமை கொண்டு பார்ப்பது சரியா என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


காங்.,கைச் சேர்ந்த, கர்நாடகா முன்னாள் முதல்வர், சித்தராமையா: குமாரசாமி சிறந்த முதல்வராக இருந்திருந்தால், 2004ல், 59 இடங்களில் வென்ற, ம.ஜ.த., 2008ல், 27 ஆக குறைந்தது ஏன்?டவுட் தனபாலு: ரொம்ப பழங்கதை எல்லாம் எதுக்குங்க... 2013ல், 122 இடங்களில் வெற்றி பெற்று, நீங்கதானே முதல்வரானீங்க... 2018 ல், மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்... 122 என்பது, 80 ஆனதற்கு, உங்களின் செயல்பாடு தான் காரணம்னு ஒத்துக்குறீங்களா என்ற, 'டவுட்'டை கொஞ்சம் விளக்குங்க...!


வி.சி., தலைவர், திருமாவளவன்: சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அமித் ஷா கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு பின், பழி தீர்த்து கொள்வதற்காக, சி.பி.ஐ.,யை ஏவி, இந்த பழிவாங்கும் நடவடிக்கையை, அமித் ஷாவும், மோடியும் நடத்தியுள்ளனர்.டவுட் தனபாலு: முன்பு, அமித் ஷா கைது செய்யப்பட்டாரே, அவர் மீதான வழக்கு என்ன ஆனது... அது, எதை நிரூபித்தது... சிதம்பரம் கைதை, பழி தீர்க்கும் நடவடிக்கை என குதிக்கும் நீங்க, இதே பார்வையை, அமித் ஷா மீது ஏன் காட்டலை... இதில் எதற்கு பாரபட்சம் என்பது தான், என்னோட, 'டவுட்!'
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இப்போது கொள்கை பேசும் இவர்கள் லட்டுபோல 29 இடம் கிடைத்து, எதிர்க்கட்சி அந்தஸ்த்தைப் பெரும் அதைத் தக்க வைத்துக்கொள்ளவில்லையே. அப்படி பா ஜ வை சேர்த்திருந்தால் டெபாசிட் கூடக் கிடைக்காதென்று தெரிந்தால்தான் 'வெற்றிகரமான தோல்வியோடு' நின்றது.

  • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

    காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதினு கூட தெரியாது, இதெல்லாம் MPயா பார்லிமென்டலா என்னத்த கிழிக்குதோ

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    அப்போ... அமித்ஷா மீது போடப்பட்ட வழக்கு பொய்யானதுன்னு ஒத்துக்கிறாரா.. குருமா....??

Advertisement