dinamalar telegram
Advertisement

கோவில் நகைகளை, லவட்டும் அதிகாரி!

Share
Tamil News
கோவில் நகைகளை, 'லவட்டும்' அதிகாரி!


''தகுதியில்லாத பலருக்கு விருதுகளை வாரி வழங்கிட்டாங்க பா...'' என, பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார், அன்வர்பாய்.''யாருக்கு, யாரு வே விருது குடுத்தா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழக அரசு சார்புல, சமீபத்துல, 201 பேருக்கு, கலைமாமணி விருது குடுத்தாங்களே... இதை வாங்குன சிலர் மேல, குற்ற வழக்குகள் இருக்குன்னு சொல்றாங்க பா... பட்டியல் தயாரிக்கும் போதே, அவங்க பின்புலம் பத்தி விசாரிக்காம விட்டிருக்காங்க...''அதே மாதிரி, நெல்லை மாவட்டம், கடையத்துல, கொள்ளையர்களை அடிச்சு விரட்டுன தம்பதிக்கு, அவசர அவசரமா சுதந்திர தின விழாவுல விருது குடுத்தாங்களே... அந்த வழக்குல, விசாரணையே முடியாம விருது குடுத்ததும், சர்ச்சையை கிளப்பியிருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.''கட்சி பேதமில்லாம பாராட்டிக்கிட்டாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு சென்றார், அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரையில, சமீபத்துல, தமிழ் வளர்ச்சி துறை சார்புல, இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நடந்துச்சுங்க... இதுல, கூட்டுறவு அமைச்சர் ராஜு, மார்க்சிஸ்ட் கட்சியின், மதுரை, எம்.பி., வெங்கடேசன் உட்பட பலரும் பங்கேற்றாங்க...''எம்.பி., பேசும்போது, 'அமைச்சர் முயற்சியால, பெரியாறு குடிநீர் திட்டம் மாதிரி பல நலத்திட்டங்கள் மதுரையில நடக்கிறது'ன்னு சொன்னாருங்க... அமைச்சர் ராஜு பேசுறப்ப, 'எம்.பி., சொன்ன மாதிரி, எல்லா திட்டங்களையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்... அவரும், எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது'ன்னு பாராட்டுனாருங்க...''பெரும்பாலும், அரசு விழாக்கள்ல, ரெண்டு தரப்புமே இணக்கமா பேசிக்கிறாங்க... ஆனா, இதை பார்க்கிற, தி.மு.க., காரங்களுக்கு தான், காதுல புகை வருதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சொந்தக்காரங்க மூலமா, கோவில் நகைகளை லவட்டிட்டு இருக்கார்னு சொல்லுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு தாவினார், அண்ணாச்சி.''எந்த ஊருல ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.''கன்னியாகுமரி மாவட்டத்துல, ரொம்பவே பிரசித்தி பெற்றது, பகவதியம்மன் கோவில்... அம்மனுக்கு காணிக்கையா வர்ற தங்கம், வைரம், வெள்ளி நகைகளை, தனி அறையில, பாதுகாப்பா வச்சிருக்காவ வே...''இந்த அறைக்கு, ஓய்வு பெற்ற போலீசார், ராணுவ வீரர்கள்னு, அஞ்சு பேரை, மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு பணிக்கு நியமிச்சது... இவங்களுக்கு மாசம், 5,000 ரூபாய் தான் சம்பளம் குடுத்தாவ வே...''சம்பளம் கம்மின்னு, அவங்களும் படிப்படியா வேலையை விட்டு போயிட்டாவ... இதனால, கோவிலின் முக்கிய அதிகாரி ஒருத்தர், அறநிலையத் துறையிடம் எந்த அனுமதியும் வாங்காம, தன் சொந்தக்காரங்க ஆறு பேரை, பாதுகாப்பு பணிக்கு நியமிச்சிருக்காரு வே...''இவங்க உதவியோட, நகைகளை கொஞ்சம் கொஞ்சமா எடுத்து, வெளியில வித்துட்டு இருக்கார்னு, கோவில் ஊழியர்கள் புகார் சொல்லுதாவ வே... இது சம்பந்தமா விசாரணை நடத்தணும்னு, மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் போயிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.''ஆறுமுக நயினார் வாங்க... காபி சாப்பிடுங்க...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே, பெரியசாமி அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆண்டவன், அம்பாள் பயம் எல்லாம் விட்டுப்போய் வெகு காலமாகிவிட்டது திருடத் துணிந்தபின், தெய்வம் என்ன மனிதர் என்ன ?

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    இனி சாமி பயமேயில்லை. சாமியாவது பூதமாவது. கலி முத்தி விட்டது

  • A R J U N - sennai ,இந்தியா

    கோவில் சொத்தை கொள்ளை அடித்தால் ஆண்டவன் மன்னிக்கமாட்டார்.அழிந்து விடுவர்

Advertisement