Advertisement

இரும்பு கரத்தை பயன்படுத்துங்கள்!

இரும்பு கரத்தை பயன்படுத்துங்கள்!


எஸ்.நடராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ராஜிவ் கொலை, மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள், உலகை அதிர வைத்தன. இவற்றால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் ஏராளம்.பயங்கரவாதத்தால், பல உயிர்களை இழந்து, சொத்துக்களும் சேதமான பின், நடவடிக்கை எடுப்பது, மத்திய அரசின் கடமையல்ல.அதற்கு முன், துரோகிகளை இனம் கண்டு, சுட்டு தள்ள வேண்டும்; இது தான், மத்திய அரசின் கடமை.இதற்காக, தேசிய புலனாய்வு சட்டத்திற்கு, கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா, லோக்சபாவில் நிறைவேறியுள்ளது; இது தொடர்பாக, சபையில் சலசலப்பு எழுந்தது.எந்த சமூகத்திற்கோ அல்லது தனிப்பட்ட மனிதருக்கோ எதிராக, மசோதா கொண்டு வரப்படவில்லை; இது, முழுக்க முழுக்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்!அகதிகள் ரூபத்திலும், சுற்றுலா பயணியர் போர்வையிலும், இந்தியாவிற்குள் ஏராளமானோர் புகுந்து விட்டனர். அவர்களை அடையாளம் காண்பது சுலபமல்ல.தேசிய புலனாய்வு சட்டத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவால், மற்றவர்கள் ஏன் பயப்பட வேண்டும். குற்றம் நிறைந்த நெஞ்சம் உள்ளோர் தான் அஞ்சுவர்.'சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம்' எனப்பேசி, போலி அரசியல்வாதிகள், அதை நியாயப்படுத்துகின்றனர். இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?ஒரு அரசியல் கட்சி தலைவர், 'பிரிவினைவாத சட்டத்தை ரத்து செய்வேன்' என, வெளிப்படையாகவே கூறுகிறார்.தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர், 'இந்திய வரைபடத்தில், தமிழகம் இருக்காது' என, பேசுகின்றனர்; இவர்கள் உள்நோக்கம் எதுவாக இருக்கும் என, தெரியவில்லை.இவர்களை இனம் கண்டு, இரும்புக்கரம் கொண்டு அழிக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை. கடும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதை தான், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு செய்துள்ளது. இந்த சட்டம், நிறைவேற்றியதன் வாயிலாக, நாட்டின் இறையாண்மையை காப்பாற்ற வழி ஏற்பட்டுள்ளது!

ஸ்வீட் மழை!க.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளில் அபாரமான ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. அடுத்த நான்கு மாதங்களில், வேலுாரில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில், வெறும், 8,000 ஓட்டு வித்தியாசத்தில் தான், தி.மு.க., வெற்றி பெற்றது. நான்கே மாதங்களில் ஓட்டுகள் சரிந்ததால், தி.மு.க.,வின் தலைவர், ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை.'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள் பார்லிமென்டை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடப்பதை, தடுத்து நிறுத்தினர். 'தென்னக ரயில்வேயில், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறியதை, தடுத்து நிறுத்தினர்' என்றெல்லாம் ஸ்டாலின் மார்தட்டி பேசினார். அதன் பின் தான், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.வேலுார் தேர்தல், ஓட்டுகள் சரிவை பார்க்கும் போது, ஸ்டாலின் ஒன்றும் முந்தி விடவில்லை; முதல்வர், இ.பி.எஸ்., ஒன்றும் பின்னடைவை சந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது. வேலுாரில் ஓட்டுப்பதிவு நடந்த போது, காலையில் மந்தமாகவும், பிற்பகலுக்கு மேல் வேகமாகவும் இருந்தது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, ரத்தான தகவல் வெளியானதால் தான், இஸ்லாமிய சமுதாய மக்கள், அதிக அளவில் வந்து ஓட்டளித்தனர் என்று கூறப்பட்டது. இந்த ஓட்டுகளே, தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்துள்ளன.இஸ்லாமிய சமுதாயம் அதிகம் வாழும், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததே சாட்சி.கடந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்த பொதுவான ஓட்டுகள், இப்போது குறைந்திருக்கின்றன. பொதுவான ஓட்டுகள் என்பது மட்டுமல்லாமல், கட்சியினரின் ஓட்டுகளும் சரிந்திருப்பதாக, தி.மு.க.,வினரே புலம்புகின்றனர்.ஏப்ரல் மாதத்தில், அ.தி.மு.க., அடைந்த தோல்வியை விட, வேலுார் தேர்தலில், அ.தி.மு.க., முன்னேற்றம் அடைந்துள்ளது. வேலுாரில், ஓட்டு எண்ணிக்கை, காலை, 8:௦௦ மணிக்கு துவங்கியது முதல், மதியம், ௧௨:௦௦ மணி வரை, அ.தி.மு.க., முன்னணியில் இருந்தது. அப்போது, அ.தி.மு.க., வினர், இனிப்பு பரிமாறி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின், தி.மு.க., முன்னணியில் இருந்து, 8,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரு கட்சிகளும், வெற்றி கொண்டாடிய தேர்தல், வேலுார் தேர்தலாகி விட்டது. தோல்வியில் இருந்து, தி.மு.க., மயிரிழையில் தப்பியது; வெற்றி வாய்ப்பை மயிரிழையில், அ.தி.மு.க., இழந்துள்ளது.

வழக்குகள் குவிவதைதடுப்பது எப்படி?எஸ்.ராதாகிருஷ்ணன், தாசில்தார் (பணி நிறைவு), பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'நாடு முழுவதும், 1,000 வழக்குகள், ௫௦ ஆண்டுகளுக்கு மேலாகவும், இரண்டு லட்சம் வழக்குகள், ௨௫ ஆண்டுளுக்கு மேலாகவும், ௯௦ லட்சம் சிவில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.இந்த நிலைக்கு, நீதித்துறை மட்டுமே முழு பொறுப்பேற்க வேண்டும். இவற்றை தீர்க்க, என்னென்ன செய்யலாம்...* ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், பைசல் செய்யப்பட வேண்டும் என, கால நிர்ணயம் வேண்டும்* எந்தவொரு வழக்கிற்கும், ௨௫ தடவைக்கு மேல் வாய்தா அளிக்கக் கூடாது. 'எக்ஸ் பார்ட்டி' தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளை, மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சீராய்வு மனு தாக்கல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்* காலங்கடந்து செய்யப்படும், மேல்முறையீட்டு மனுக்களின் மீது, கால தாமதத்தை மன்னித்து ஏற்கும் முறையை கை விட்டு, எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்* நீதிமன்ற தீர்ப்பின் மீது, இரு முறை மட்டுமே, மேல் முறையீடு செய்யலாம் என, அறிவிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பாக, உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் மட்டுமே, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என, தெரிவிக்க வேண்டும்* எல்லா வழக்குகளிலும், சிறப்பு அனுமதி மனு எனப்படும், எஸ்.எல்.பி., தாக்கல் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதோடு, பொது நல வழக்குகளில், நீதிமன்றம் கட்டணத்தையும், கணிசமாக உயர்த்த வேண்டும்* விளம்பரத்துக்காக தொ டரப்படும், பொது நல வழக்குகளில், அபராத தொகையை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.இது தொடர்பாக, சட்ட குழுவும், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கலந்து பேசி, ஒரு சட்ட முன்மொழிவை அரசுக்கு அனுப்பி, அதை சட்டம் ஆக்கினாலொழிய, தேங்கும் வழக்குகளை பைசல் செய்ய முடியாது!lll

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement