Advertisement

குமரியில் கடல் சீற்றம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது

நாகர்கோவில்: குமரியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. ராஜாக்கமங்கலம் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டு அழிக்கால் கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது. கடலில் மூன்று மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை எடுத்து கொண்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். ராஜாக்கமங்கலம்துறை, குளச்சல், மார்ததாண்டம்துறை, வள்ளவிளை, தூத்தூர், இரையுமன்துறை, பூத்துறை கடல் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இந்த சீற்றம் வரும் நாளை வரை நீடிக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடல் சீற்றத்தால் அழிக்காலில் வெள்ளம் புகுந்தது100 வீடுகளில் மக்கள் வெறியேற்றமம்


கடல் நீர் கிராமத்தை சூழ்ந்தும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வராததை கண்டித்து நாகர்கோவில்-குளச்சல் ரோட்டில் அழிக்கால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆண்டுக்கு நான்கு முறை இதுபோன்று கடல் சீற்றம் ஏற்பட்டு வேறு வீடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் புக வேண்டியுள்ளது எனவும், அதிகாரிகளும், அரசும் அலட்சியம் காட்டுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதில் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement