dinamalar telegram
Advertisement

அந்திரசன் மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Share
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில், 28 ஆண்டுகளுக்கு முன் படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் பழைய தாலுகா அலுவலகம் வளாகத்தில், 175 ஆண்டுகளை கடந்த அந்திரசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது.இப்பள்ளியில், 1990 - 91ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தில் நடந்தது.இப்பள்ளியில், 91ம் ஆண்டு படித்த, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி.,யான செல்வம் மற்றும் பல அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

28 ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பில், பள்ளி காலத்தில் நடந்த நிகழ்வுகளை, ஒருவருக்கொருவர், பசுமை நிறைந்த நினைவுகளாக பகிர்ந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement