Advertisement

டவுட் தனபாலு

காங்., செய்தி தொடர்பாளர், குஷ்பு: ப.சிதம்பரம் வீட்டிற்கு, சி.பி.ஐ., சென்றது, பா.ஜ.,வின் பயத்தை காட்டுகிறது.

டவுட் தனபாலு: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிதம்பரம் வீட்டுக்கு, சி.பி.ஐ., சென்ற போது, வீட்டில் அவர் இருந்தாரா... இது, எதைக் காட்டுது என்பதுதான், என்னோட, 'டவுட்!'

அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன்: கட்சியை பதிவு செய்யும் முயற்சி நிறைவடைந்து, பொது சின்னம் கிடைத்தால், நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்.

டவுட் தனபாலு: எந்தச் சின்னம் தந்தால் என்னன்னு, ஆர்.கே.நகரில், துணிச்சலாக நின்ற நீங்க, இப்போ எதற்கு, அதை எல்லாம் காரணமாக் காட்டுறீங்க... லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதால், கட்சியில் பலரை இழக்க வேண்டி வந்தது... இருக்குற கொஞ்ச நஞ்ச ஆட்களை தக்க வைக்கணும்னா, தேர்தல் பக்கமே தலைவைக்கக் கூடாதுங்கறதால் தான், இப்படி சாக்குப்போக்கு சொல்லி நழுவுவதாக, ஆளாளுக்கு, 'டவுட்' கிளப்புறாங்களே... இதை எப்படிப் பார்ப்பது...!

பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: கடந்த, 50 ஆண்டுகளில், தமிழகம், எதிர்பார்த்த வளர்ச்சி பெறவில்லை. தி.மு.க., செய்த தவறுகளை சரி செய்ய, நீண்ட காலமாகும்.


டவுட் தனபாலு: எதிர்பார்த்த அளவு, அ.தி.மு.க., ஆட்சியில் முன்னேற்றம் ஏதுமில்லை என்பதைத் தான், இப்படிச் சப்பைக்கட்டு கட்டிச் சொல்றீங்களா... நேற்று வரை, 'திராவிடக் கட்சிகளால், வளர்ச்சி இல்லை'ன்னு சொன்ன நீங்க, இன்று, தி.மு.க.,வை மட்டும் தனியே பிரித்துச் சொல்வதற்குப் பெயர் தான், கூட்டணி தர்மமா என்ற, 'டவுட்' வருதே...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஐம்பதாண்டு சரித்திரத்தில், பாதிக்கு மேல் அதிமுகவும் பங்கேற்றிருக்கையில், கிரெடிட்டை திமுகவுக்கு மட்டும் கொடுத்து இப்படிப் பாரபட்சமாக இருக்கலாமா பொன்னார் அவர்களே

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    தேடிப்போன சிபிஐ.க்குப் பயமாம்.... ஓடி ஒளிஞ்ச ப.சி. தைரியசாலியாம்.... அம்மணி குஷ்பூவுக்கு மறை கழண்டுவிட்டது போல.... கீழ்பாக்கத்தில் ஒரு அட்மிஷன்.... ப்ளீஸ்....

Advertisement