Advertisement

விபத்து வழக்கு ஆவணங்கள் பெற இனி லஞ்சம் வேண்டாம்!இணையத்தில் பதிவேற்ற திருத்தம்!

கோவை:வாகன விபத்து தொடர்பான வழக்கு ஆவணங்கள், முழுமையான விபத்து அறிக்கை ஆகியவற்றை, டிஜிட்டல் வடிவத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
.வாகன விபத்து தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்கள், அது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியிருக்கும். லஞ்ச நடைமுறைகளை கடந்து செல்லாமல், ஆவணங்களை பெறுவது மிகவும் சிரமம்.இப்பிரச்னைக்கு தீர்வு காண உதவும் நோக்கில், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய விதிகளில், அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. விபத்து வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்ட விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையின்படி, விபத்து வழக்கை விசாரிக்கும் அதிகாரி, நான்காம் படிவத்தில் தாக்கல் செய்யும் அறிக்கை, விபத்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், சி.சி.டி.என்.எஸ்., எனப்படும், 'கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க்' இணையதளத்தில், டிஜிட்டல் வடிவத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், விபத்து வழக்கு தீர்ப்பாயம் மற்றும் சட்ட உதவி ஆணையத்துக்கும், டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பிய விவரத்தை, மாநில குற்ற ஆவண காப்பகம், விபத்து தீர்ப்பாயம், சட்ட உதவி ஆணையத்துக்கு, முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய திருத்தம் வாயிலாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்து கழகங்கள், வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள், விபத்து வழக்கு தீர்ப்பாயம், சட்ட உதவி ஆணையம் ஆகியவை, சி.சி.டி.என்.எஸ்., இணையதளம் மூலம் வழக்கு ஆவணங்களை, எளிதில் பெற முடியும். விபத்து வழக்கு ஆவணங்களை, டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்து விட்டால், முழுமையான விபத்து அறிக்கையை, கையினால் தயார் செய்யும் முறைக்கு, முடிவு கட்டி விடலாம்' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Raj - coimbatore,இந்தியா

    இதை ஏன் குற்றப்பிரிவு போலீசாரும் நடை முறை படுத்த கூடாது ? FIR பதிவு செய்த பின், ஏன் அதை டிஜிட்டல் வடிவில் சம்பந்தப்பட்ட அனைவரும் காணுமாறு செய்யக்கூடாது ? FIR பதிந்த பின்னர் மாற்றங்கள் செய்வது தடுக்கலாம்.

Advertisement