Advertisement

டில்லி பல்கலை.,க்கு மோடி பெயர்: எம்.பி., விருப்பம்

புதுடில்லி : டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,க்கு மோடி பல்கலை., என பெயர் மாற்றப்பட வேண்டும் என பா.ஜ., எம்.பி., ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.


பஞ்சாபி பாடகரும் டில்லி பா.ஜ., எம்.பி.,யுமான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டது, காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது குறித்து அவர் பேசினார்.



அப்போது அவர், காஷ்மீரில் அமைதி நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும். நமது முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு நாம் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலை என்ற பெயரை மோடி பல்கலை., என மாற்றும்படி பரிந்துரைக்கிறேன். ஏதாவது ஒன்று மோடியின் பெயரில் இருக்க வேண்டும் என்றார்.

நேரு பல்கலை., 1969 ம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பெயரால் நிறுவப்பட்டதாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

  • Boopathi Subramanian -

    ஏன் புதிதாக ஒன்றை ஏற்படுத்தி அதற்கு மோடி பெயரோ, வாஜ்பாய் பெயரோ வைக்கலாமே

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    அகத்தினழகு முகத்தில்தெரியும் என்ற தமிழனின் பொன்மொழியன்றோ

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    HANS எதையோ பெரிதாக எதிர்பார்கிறாரோ என்ற வலுவான சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    அரசியலில் RAJA என்ற பெயருள்ளோர் பொருத்தமே இல்லை.

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    உமக்கென்ன எரிச்சல். வேணும்னா உங்க பெயரையும் மாற்றிக்கொள்ளவும்

Advertisement