Advertisement

இந்தியாவில் உலகின் மிகப்பெரும் சுகாதாரத்திட்டம்: மோடி

திம்பு : உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள ராயல் பல்கலை.,யில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூடானுக்கு யார் வந்தாலும் அதன் இயற்கை அழகு,ரம்மியம், மக்களின் எளிகை ஆகியன அனைவரையும் கவரும். பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய பிணைப்பு இருப்பது இயற்கையானது. நாம் புவியியல் ரீதியாக மட்டுமல்ல வரலாறு, கலச்சாரம், ஆன்மிக பண்பாடு ஆகியன இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களிடையே தனித்துவம் வாய்ந்த பிணைப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் 500 மில்லியன் இந்தியர்களுக்கும் சுகாதார காப்பீட்டை வழங்கி உள்ளது. உலகிலேயே மிக குறைந்த விலையில் டேட்டா இணைப்பு இந்தியாவில் கிடைக்கிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானவர்கள் பலனடைந்துள்ளனர்.


எனது 'Exam Warriors' புத்தகத்தில் நான், புத்தரின் போதனைகளால், குறிப்பாக முக்கியமான நேர்மறையான, பயத்தை எதிர்கொள்ளுதல், தனித்து இருத்தல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன். பூடானின் சிறிய ரக செயற்கைகோளை ஏவுவதற்காக பூட்டானிய விஞ்ஞானிகள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், இன்ஜினியர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் விரைவில் வருவீர்கள் என நம்புகிறேன்.

2022 ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானது. இவ்வாறு மோடி பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • ஆப்பு -

  சுத்தமா துடைச்சு எடுத்திட்டாங்க.. பொருளாதாரத்தைத் தான் சொல்கிறேன்.

 • Raghavendran -

  The toilet, bathrooms in railway stations and bus stands are at its worst conditions. Example, Velachery railway station toilets, Marina beach toilets.

 • pazhaniappan - chennai,இந்தியா

  ஆமாம் உலகின் மிகப்பெரிய மெகா திட்டங்கள் எல்லாம் மோடி அவர்கள்தான் நிறைவேற்றியிருக்கிறார் பல கோடிபேருக்கு வங்கிக்கணக்கு அதன் மூலம் மதம் 150 ரூபாய் மானியம் வரும் அதற்க்கு குறைந்த பட்சம் 10000 ரூபாய் குறைந்த பட்ச தொகை கணக்கில் இருக்க வேண்டும் இல்லாவிடில் 500 ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்துவிடுவார்கள் ,பல லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு கச்சா எண்ணெய் 150 டாலர் ஒரு பீப்பாய் என்ற விலைக்கு இருந்தபோது எரிவாயு விலை என்னவாக இருந்ததோ அதை விட அதிகம் கொடுத்து வாங்க வேண்டும் (தற்போது 60 டாலர் ஒரு பீப்பாய் )அவ்வாறு வாங்கினால் 150 மானியம் கிடைக்கும் நம்மூரு ஆடித்தள்ளுபடி மாதிரி , ஒன்றே ஒன்றுக்கு மட்டும் திரு மோடி அவர்களே பதில் கூறுங்கள் உங்களால் ஏதாவது உருவாக்கப்பட்டிருக்கா ,ஏதாவது ஓன்று கூறுங்கள், சிறு குறு தொழில்களை அழித்தீர்கள் பொதுத்துறை நிறுவனங்களை அழித்தீர்கள்,பண மதிப்பை அழித்தீர்கள் ,73 ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பிஜேபி ஆட்சியில் இருந்திருக்கிறது நீங்கள் உருவாக்கியதை பட்டியலிடுங்கள்,உங்களால் உருவாக்கப்பட்ட காவலிநிறுவனங்க l எத்தனை ,மருத்துவ மனைகள் எத்தனை , தொழில் நிறுவனங்கள் எத்தனை . நீங்கள் கூறுகிற உலகிலேயே மிகக்குறைந்த விலையில் டேட்டா இணைப்பு கிடைத்ததற்கு காரணமான தஹ்கவல் தொழில் நுட்ப்ப அடித்தளத்தை அமைத்தது யார் ? BSNL என்கிற பொதுத்துறை நிறுவனம் குக்கிராமத்துக்கு கூட தோலை பேசியும் செல்லிட பேசியும் இருக்க வேண்டுமென்ற நோக்கில் லாபம் கருதாது செயல்பட்ட அரசுகளாலா அல்லது அம்பானி போன்றோர்களுக்கு அதையே விற்று காசாக்கும் உங்களால , சந்திராயன் திட்டமிட்டது எப்போது உங்கள் காலத்தில ,நாட்டின் நலன்களையும் ,வளங்களையும் விற்று செல்வந்த நாடக காட்டிக்கொள்ளலாம் சிலகாலம் ஆனால் அதன் தொடர்ச்சி மிகுந்த சரிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதே நிதர்சனம் .

  • Ranga Ramanathan - coimbatore,இந்தியா

   தோழரே, உங்களின் வெனிசுலா எப்படி? சாப்பாடு இல்லாததால் போலீஸ் , ராணுவ வீரர்கள் கூட நாட்டை விட்டு ஓடுறாங்களாமே ?

 • venkatan - Puducherry,இந்தியா

  கல்வி, சுகாதார திட்டங்கள் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவைத்துறைகள்.. இவைகளை தனியார் மயமின்றி, மதசார்பு தன்னார்வ சேவை அமைப்புக்களை பொறுப்பாக்கி, சிறிது ஊக்கத்தொகையை கொடையாக வருடா வருடம் தணிக்கைக்குப்பின் தரலாம். இவ்வாறான முறை நல்ல பயனழித்துள்ளது. முழுமையாக தனியாரிடம் விட்டால் சேவை குறைபாடு, லஞ்ச ஊழல் நிதி முறைகேடு அதிகம் நடக்க சாத்தியம்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  பீகாரில் தனியார் மருத்துமனைகளில் இந்த திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அதிகாரிகளின் திடீர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக தகவல் ..

Advertisement