Advertisement

தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கடலூர், சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலமாக மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் காலாபேட், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லிகுப்பம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வருகிறது. பல நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் வண்டலூர், செம்பரம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், தாம்பரம், ஒரக்கடம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement