Advertisement

தாய் வழியில் மகள்?

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர், சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், பிரதமர், அமித் ஷா உட்பட அனைத்து பா.ஜ., தலைவர்களும் பங்கேற்றனர். சுஷ்மாவின் மகள், பன்சுரி, இந்நிகழ்ச்சியில் பேசினார்.
தன் குடும்பத்திற்கு, மோடி எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்றும், பா.ஜ., தலைவர்கள், தன் அம்மாவிற்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்றும், ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல பேசினார்.

சுஷ்மா உயிரோடு இருந்த வரை, பன்சுரி எந்தவோர் அரசியல் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை; அரசியல்வாதிகளிடம் பேசியதும் இல்லை. அப்படிப்பட்டவர், தன் அம்மாவின் அஞ்சலி நிகழ்ச்சியில், சரளமாக பேசியது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சுஷ்மா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய, 25வது வயதில், ஹரியானாவின், அம்பாலா தொகுதியிலிருந்து, எம்.எல்.ஏ.,வாகி, தன் அரசியல் வாழ்க்கையை துவக்கியவர்.இந்த வருட இறுதியில், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., சார்பில், பன்சுரி, இம்மாநிலத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கின்றனர், அதன் தலைவர்கள். பன்சுரியின் பேச்சு பிரதமர், மோடியையும், அமித் ஷாவையும் கவர்ந்துவிட்டதாம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நல்லவர்கள் வருவது நல்லதுதான் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.

 • Jai Hinth - chennai,இந்தியா

  இதுதான் வாரிசு அரசியல். நீங்கள் சாப்பிட்டது போதும், மற்றவர்களும் கொஞ்சம் சாப்பிடட்டுமே அடுத்தவர்களுக்கு வழிவிடுங்கள், ஊருக்குத்தான் உபதேசம்

 • ராமநாதன் நாகப்பன் -

  யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம், இன்னாருடைய மகள் மகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருப்பினும் தப்பில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய முகங்கள் தேவைப்பட்டால் தாராளமாக அவரை கட்சியை பணிக்கு அரசியல் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அதை நியாயப்படுத்துவதற்காக மற்ற கட்சிகளை கேவலமாகப் பேசுவது மற்றவர்களை தரக்குறைவாக வார்த்தைகளில் இகழ்வது அல்ல பண்பு. தமக்கு சாதகமான கட்சி ஆட்சியில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம், எது சொன்னாலும் அது நியாயம் என்ற போக்கில் நடந்து கொள்கிறார்கள். இது எந்த காலத்திற்கும் எந்த சூழ்நிலைக்கும் ஆரோக்கியமான செயல் அல்ல. காலம் நிச்சயம் இவர்கள் செய்கின்ற தவறை உணர்த்தும். அது அனைவரையும் உட்படுத்தி சொல்லப்படுகிற விஷயம்.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  திறமை இருக்கும் என்றால் போட்டி இடுறதுலே என்னங்க தப்பு ஒருஇலவும் தெரியாமலே இந்திராக்கு பேரன் ராஜீவுக்குப்புத்திறன் புத்ரி என்று நேருவின் பெண்வாரிசுகள் காலம் இறங்குதே அதைவிடவா சுஷ்மாவின் வாரிசு கேவலம் வெல்கம் பான்சுரி பேட்டி , நீயும் உன் அம்மாவைப்போலவே நேர்மையுடனும் நேர்கொண்டப்பார்வையுமாக இருப்பே என்று நம்புகிறேன் , BESTWISHES

 • Darmavan - Chennai,இந்தியா

  சுஷ்மா ஊழல் கரை படியாதவர்...சாமானியர்களுக்கு /எதிரி பாகிஸ்தானிகளுக்கும் மனிதாபிமானத்தோடு உதவியவர்...தாயை போல பெண் .கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

Advertisement