Advertisement

இயந்திர பழுதால் மெட்ரோவில் இலவச பயணம்

சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பயணியர் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நேற்று காலை 6:00 மணிக்கு இணையதள சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் டோக்கன் மற்றும் பயண அட்டைகளை சோதனை செய்யும் இயந்திரங்கள் இயங்கவில்லை.இதனால் மெட்ரோ ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட பயண சீட்டுகளை பயணியருக்கு வழங்கினர். காலை 8:30 மணியளவில் அதிகளவில் பயணியர் கூட்டம் குவிந்தது.இதனால் நிலைய அதிகாரிகளுக்கும் பயணியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 32 நிலையங்களிலும் பயணியர் கூட்டம் அதிகரித்ததால் ஊழியர்களால் கையால் பயண சீட்டு எழுதி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை பயணியர் இலவசமாக மெட்ரோ ரயிலில் அனுமதிக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் காலை 10:30 மணிமுதல் பயணியருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement