Advertisement

டூவீலர்கள் மோதல் : இருவர் பலி

நாகர்கோவில், களியக்காவிளை அருகே இரு டூவீலர்கள் மோதியதில் இருவர் பலியாயினர். கேரள மாநிலம் உதயன்குளங்கரையை சேர்ந்தவர் சுதிர் 32. இவரது நண்பர் விளாத்தான்கரையை சேர்ந்தவர் பிஜூகுமார் 41. இவர்கள் இருவரும் டூவீலரில் களியக்காவிளை அருகே வந்து கொண்டிருந்தனர். சுதிர் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் இவர்கள் மீது மோதியது. இதில் சுதிர், குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.பிஜூகுமார் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார். மற்றொரு பைக்கில் வந்த தினேஷ் 22, பிரபு 22 இருவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.இதில் சுதிர் ெஹல்மட் அணிந்திருந்தும் உடலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் இறந்தார். களியக்காவிளை போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement