Advertisement

பதவி கிடைச்சா சந்தோஷம்!

'பதவி கிடைச்சா சந்தோஷம்!'

அ.தி.மு.க.,வில், மதுரை வடக்கு மாவட்டசெயலராக இருப்பவர், ராஜன் செல்லப்பா.எம்.எல்.ஏ.,வாக இருக்கும் இவர், தன், 69வதுபிறந்த நாளை கொண்டாடினார். கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு முதல் தொண்டர்கள் வரை, இவரதுவீட்டில் குவிந்தனர். வீட்டின் ஒரு பக்கம், மெகாபந்தல் போடப்பட்டு, காலை முதல் மதியம் வரை, தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது.மணப்பட்டி முருகேசன் தயாரிப்பில், மணக்க மணக்க, மட்டன் பிரியாணி விருந்து பரிமாற,தொண்டர்கள் ஒரு பிடி பிடித்தனர். நலத்திட்டஉதவிகளையும், அவரது ஆதரவாளர்கள் வழங்கினர்.அ.தி.மு.க., முக்கிய பிரமுகர் ஒருவர், 'அமைச்சரவையில் நீக்கப்பட்ட மணிகண்டனுக்கு பதிலாக, ராஜன் செல்லப்பாவிற்கு இடம் கிடைக்கலாம் என்பதால், தலைமைக்கு, தனக்குள்ள செல்வாக்கை மறைமுகமாக காட்டுகிறார்' எனக் கூற, 'பதவி கிடைத்தால் சந்தோஷம் தானே' என்று கூறி, அவரதுஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement