Advertisement

இறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்!

உணவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பயன்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு, உலகெங்கும் தடை வர ஆரம்பித்துள்ளது. இதனால், அதே தன்மையுள்ள, ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத தாளை உருவாக்கும் தேடல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த, 'கியுவான்டெக்' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், இறால் போன்ற மீன் வகைகளின் வெளி ஓடுகள் இதற்கு மாற்றாக இருக்கும் என, அடித்துச் சொல்கின்றனர்.இறாலின் வெளி ஓடுகள் கழிவாக எறியப்படுகின்றன. அவற்றை நொதிக்க வைத்தால், ஓட்டிலுள்ள, 'சின்டின்' என்ற இயற்கையான உயிரி பாலிமர்களை பிரித்தெடுக்க முடியும்.சற்று கெட்டியான சின்டினை, வேதிவினை மூலம், 'நெகிழும் தன்மையுள்ளதாக மாற்றினால், 'சிடோசான்' என்ற பொருள் கிடைக்கிறது. இதை படலமாக ஆக்கினால், பிளாஸ்டிக் காகிதம் போலவே தெளிவான படலமாக இருக்கிறது.

இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கும் சிடோசான் காகிதம், 90 நாட்களுக்குள் மட்கிவிடும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இப்போதே ஸ்காட்லாந்தின் சூப்பர் மார்க்கெட்டுகள், சிடோசான் காகிதங்களை தங்கள் உணவு பகுதிக்குப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளனர். பிளாஸ்டிக் காகிதத்திற்கு வந்து விட்டது ஒரு மாற்று.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்படியானால் ஐயாறுங்க எல்லோரும் இந்த இறால் தோல் பாக்கெட்டில் நெய் போன்ற பொருட்களை புனிதமாக வாங்கிச்செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லுங்கள்

    • D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா

      ஏன்டா உன்னோட அரிப்பை உன் வீட்ல வச்சுக்கோ. எதுக்குடா தேவை இல்லாம ஐயர் என்று பேசி சாதி சண்டைக்கு வழி வகுக்கிறிங்க

    • abdul rajak - trichy,இந்தியா

      ஆனால் பண்ணுற உள்குத்து இருக்கே அப்பப்பா

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இது ஒன்றும் புதிதல்ல. Chitin , chitosan போன்ற பாலிமர் பொருட்கள் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளன. பார்க்க: s://en.wikipedia.org/wiki/Chitosan

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    அருமையான கண்டுபிடிப்பு என நினைக்கிறேன்

  • Nathan - Hyderabad,இந்தியா

    போடுராலே, வெஜிடேரியன்செல்லாம் என்னானு தெரியாமயே எலும்புலேர்ந்து தயாரிக்கும் ஜெலாட்டினால் பண்ணப்பட்ட மருந்து காப்ஸுல்களை முழுங்குவது போல், மாட்டெலும்பில் தயாரிக்கும் வாழ வழப்பான ஜெப உருட்டு மாலைகள் போல், வெவரம் தெரியாம இந்த பிளாஸ்டிக் பையில பூஜைக்கு பூ, மடியா வெண்ணை நெய்யெல்லாம் வரும் போல.

Advertisement