Advertisement

குமரியில் மீனவர்கள் வலைகளுக்கு தீ

நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 விதமான வலைகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


குமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் லாட்சன்38 ரூபன் 40 மோகன்ராஜ்30.நேற்று முன் தினம் மீனவர்கள் மீன்பிடி பணியை முடித்து விட்டு கீழ்மணக்குடி ஓய்வறையில் எச்சவலை கல் இரால் வலை வாவல் வலை கணவாய் வலை ஒத்தகுண்டு வலை ஆகிய 5 விதமான வலைகளை உலர்த்த போட்டு விட்டு வீடு சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை ஓய்வு கூடத்தில் இருந்து கரும்புகை வந்ததது.



இதை கண்ட அப்பகுதியினர் மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போது நைலான் வலையில் பற்றிய தீ மளமளவென பற்றியது. தீயை அணைக்க முயன்றும் மீனவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் வலையில் பற்றிய தீயை ஒரு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.



இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் வைத்த தீயில் எரிந்து போன வலைகள் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் ஆகும். தொடர்ந்து மீனவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement