Advertisement

டவுட் தனபாலு

நடிகர் ரஜினிகாந்த்: என் கட்சி துவக்கம் பற்றிய அறிவிப்பு குறித்து, விரைவில் தெரிவிக்கப்படும். தமிழக அரசியலின் மையமாக, போயஸ் கார்டன் மீண்டும் மாறுமா என்பதை, பொறுத்திருந்து பாருங்கள்.


டவுட் தனபாலு: சரியா போச்சு... துவக்கம் குறித்த அறிவிப்புக்கே, இன்னும் நாள் குறிக்கலையா... இதுக்கு பேசாமல், '2021 சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு, உடனடியாக முடிவு எடுக்கப்படும்'னு, சொல்லிடலாமே... நெடிய காத்திருப்பு என்பது, சில நேரங்களில் சுவாரஸியத்தை கூட்டும்; பல நேரங்களில், உப்புச்சப்பற்று போகும் என்பது, உங்களுக்கு தெரியாதா என்பது தான், என்னோட, 'டவுட்!'


***


பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: டில்லியில் உள்ள, தி.மு.க., - எம்.பி.,க்கள், பா.ஜ.,வுக்கு சலாம் போடுகின்றனர். 'நாங்கள் தான் உங்களின் உண்மையான நண்பர்கள். உங்களின் நிஜ நண்பர்களை் தேடி பிடிக்க மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு தமிழகத்தில் தோல்வி' என, தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் ஏன் அவர்கள் சொல்ல வேண்டும்?


டவுட் தனபாலு: தி.மு.க.,விடம் இவ்வளவு கேள்வி கேட்குறீங்களே... இதைப் பற்றி, பா.ஜ., என்றைக்காவது, மூச்சு விட்டிருக்கா... அப்படீன்னா, இது என்ன கணக்கு... சலாம் வேலைசெய்தால், உங்க உறவுக்கு, பா.ஜ., 'குட் பை' சொல்லிடும்கற பயம் வந்திடுச்சோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!


***


தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத மக்கள், தம்மை தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை, நெல்லையில், மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது.


டவுட் தனபாலு: பட்டப்பகலில் பிரியாணி கடையிலும், பியூட்டி பார்லரிலும், தாக்குதல் நடந்தபோது, இந்த வசனத்தையும், விமர்சனத்தையும், எங்கே ஒளித்து வைத்திருந்தீங்க... 'உடைமைக்கு ஊறு விளைவிக்க வரும் எவரையும், சும்மா விடாதீர்கள்; நெல்லை தம்பதியை போல், எதிர்த்து நின்று, வெளுத்து வாங்குங்கள்'னு, இப்போதாவது அறிவுறுத்தினால் என்ன என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ' என்பது போல், 'ஆமாம் , இவர் கட்சி ஆரம்பிப்பது என் பேரன் காலத்தில் தான் ' என்று ரசிகர்கள் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்

Advertisement