Advertisement

சுதந்திர தினம்: டில்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

புதுடில்லி: சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டில்லியில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

20 ஆயிரம் போலீசார்



மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.டில்லியில் உள்ள உயரமான கட்டடங்களில், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடி, தேசிய கொடி ஏற்ற உள்ள, செங்கோட்டை பகுதி முழுவதும், பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலமும், கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.டில்லியில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார், துணை ராணுவ படையினர்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யார் சுற்றி திரிந்தாலும், அவர்களை பற்றி உடன் தகவல் கொடுக்க, பொது மக்களை, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஓட்டல்களில் தங்கியுள்ளோரையும்,போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    வாக்கு சீட்டு எண்ணும் இடத்துக்கே அஞ்சு அடுக்கு பாதுகாப்புன்னு சொல்றாங்க. அம்மாம் பெரிய டில்லிக்கு மூணு அடுக்கு பாதுகாப்பு போதுங்களா?

Advertisement