Advertisement

கொலை, தற்கொலை, பலி

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
திருமுல்லைவாயல்: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர், கோபிநாத், 24. பாடி, ரெட்டி தெருவில், உறவினர் வீட்டில் தங்கி, எழும்பூரில் உள்ள, அரசு கவின் கலைக்கல்லுாரியில் படித்து வந்தார்; பகுதி நேரமாக கொத்தனார் வேலையும் செய்தார். நேற்று, திருமுல்லைவாயல், தென்றல் நகரில் உள்ள ஒரு வீட்டில், கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார்.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு உயிரிழந்தார். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
குடிபோதையால் விபரீதம்
செம்மஞ்சேரி: ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர ராவ், 32; ஐ.டி., ஊழியர். சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். வேலைக்கு செல்லாமல், மது குடித்து வந்துள்ளார். இதனால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று, சோழிங்கநல்லுாரில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், நண்பரை பார்க்க சென்றவர், 10வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்தார். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கிட்டு தற்கொலை
திருநின்றவூர்: திருநின்றவூர், நடுக்குத்தகையைச் சேர்ந்தவர், சங்கர், 43; தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி சரிதா, 38; தனியார் நிறுவன தொழிலாளி. சங்கர், சமீபமாக மது குடித்து, வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதை, மனைவி கண்டித்ததால், விரக்தியடைந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கூவத்தில் குதித்து வாலிபர் பலி
சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர், பிரபாகரன், 40; துணி வியாபாரி.நேற்று மதியம், சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில் உள்ள, மேற்கு கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர், உடலை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement