Advertisement

சென்னை பாரம்பரிய ரயில் இயக்கம்

சென்னை:சுதந்திர தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து, கோடம்பாக்கம் வரை, பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில், இன்று இயக்கப்படுகிறது.இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தை, இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள ஏதுவாக, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் முக்கிய நிலையங்கள் இடையே, நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட, பாரம்பரிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இன்று காலை, 11:45 மணிக்கு, கோடம்பாக்கம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், பொதுமக்கள் பயணம் செய்ய முடியாது. நிலையங்களிலும், வழி நெடுகிலும் பார்த்து மகிழலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement