Advertisement

80ஐ கற்பழிக்க முயன்ற 20 க்கு மூன்றுஆண்டு சிறை

சென்னை:துாங்கிக் கொண்டிருந்த, 80 வயது மூதாட்டியை, கற்பழிக்க முயன்ற, 20 வயது இளைஞனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், சரவணன், 24. அதே பகுதி, மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. 2015ல், பகலில் கதவை திறந்து வைத்து, வீட்டில் துாங்கினார்.அப்போது, வீட்டிற்குள் நுழைந்த சரவணன், அவரை கற்பழிக்க முயன்றார். மூதாட்டியின் அலறல் கேட்டு, அவரது மகன் ஓடி வந்தார். அதற்குள், சரவணன் தப்பி ஓடினார். ஆர்.கே.நகர் போலீசார், சரவணனை கைது செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, மஞ்சுளா முன் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர், ஸ்ரீலேகா வாதாடினார்.விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி, மஞ்சுளா, சரவணனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயி-ரம் ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ஆப்பு -

    சிறு குழந்தைகளை போல வயதானவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள இயலாதவர்கள். இவர்களைத் தாக்குபவர்கள் மீதும் போக்சா பாயணும்.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இந்த திமுக ஆட்களுக்கு கடவுள் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    காமத்திற்கு கண் இல்லை.

  • LAX - Trichy,இந்தியா

    கைக்குழந்தை முதல் வயதான மூதாட்டிகளையும் விட்டு வைக்கறதில்ல.. இதுல எதுக்கெடுத்தாலும் பெண்களின் உடைகளைப் பத்தி குறை சொல்றானுங்க.. கேடுகெட்டவனுங்க..

Advertisement