Advertisement

சிறுவனிடம் சில்மிஷம் வாலிபரிடம் விசாரணை

வடபழனி:சிறுவனிடம், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட, வாலிபரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுவனின் பெற்றோர், நேற்று முன்தினம் இரவு, வடபழனி காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்றை அளித்தனர். இதில், என், 7 வயது மகனுடன் எங்களது தெருவைச் சேர்ந்த, பவானிதாஸ், 20, என்ற வாலிபர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.இதனால், எனது மகனின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார்.புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார், பவானிதாசை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement