Advertisement

சடையங்குப்பம் ஏரி தூர் வாரும் பணி துவக்கம்

Share
மணலி:மணலி, சடையங்குப்பம் ஏரி துார் வாரும் பணி, நேற்று துவங்கியது.மணலி, 16வது வார்டில், சடையங்குப்பம் ஏரி உள்ளது.
சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரி, 79 ஏக்கர் பரப்பு, 3.2 கி.மீ., துார கரைகளை கொண்டது.மழை இல்லாததால், ஏரி முழுவதும் வறண்டது. ஏரியில் அதிகளவில், தண்ணீரை சேமிக்கும் வகையில், துார் வாரி ஆழப்படுத்த, கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.இதையடுத்து, சடையங்குப்பம் இளைஞர்கள், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன், ஏரியை துார் வாரும் பணியை, நேற்று காலை துவக்கினர்.பொதுப்பணித் துறை மேற்பார்வையில் நடக்கும்பணியில், ஏரி, 2 அடி வரை ஆழப்படுத்தப்பட உள்ளது. சுற்றியுள்ள, 3.2 கி.மீ., துார கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. இப்பணிகள், ஒரு மாதம் நடக்கும் என, இளைஞர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement