Advertisement

பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

சைதாப்பேட்டை:அடையாறில், பன்றிக்காய்ச்சல் பாதித்த பெண், சிகிச்சை பலனின்றி பலியானார்.

அடையாறு மண்டலம்,171வது வார்டு, சைதாப்பேட்டை, காவேரி நகரைச் சேர்ந்தவர் முத்தம்மா, 46. இவருக்கு, சில நாட்களுக்கு முன், காய்ச்சல் பாதித்துள்ளது. ரத்த பரிசோதனையில், பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தம்மா, நேற்று முன்தினம் இரவு இறந்தார். அடையாறு மண்டலத்தை பொறுத்த வரை, மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட சிகிச்சைக்கு சேர்ந்தவர்கள் குறித்த விபரங்களை, மருத்துவமனை நிர்வாகம், மத்திய சுகாதாரத் துறையின், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.அங்கிருந்து, மாநகராட்சி சுகாதாரத் துறை வழியாக, மண்டல சுகாதார அதிகாரிக்கு, தகவல் அனுப்பப்படும். இந்த விபரத்தை வைத்து, நோய் பாதித்த நபரின் வீட்டை சுற்றி, மலேரியா ஊழியர்கள் மூலம், தடுப்பு நடவடிக்கை எடுப்பது வழக்கம்.ஆனால், சில சுகாதார அதிகாரிகள், தனியார் மருத்துவமனையை அணுகி, காய்ச்சல் பாதிப்பு விபரங்களை, மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பாமல், நேரடியாக மண்டலத்திற்கு அனுப்ப வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு செல்லாமல், மண்டல அளவில் முடித்துக்கொள்ள, இதுபோன்று செயல்படுவதாக தெரியவந்துள்ளது.இதனால், காய்ச்சல் பாதிப்பு குறித்த விபரங்கள், சுகாதாரத் துறைக்கு செல்வது தடுக்கப்படும். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கையிலும், பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.அனைத்து மருத்துவமனைகளும், காய்ச்சல் பாதிப்பு விபரங்களை, நேரடியாக மத்திய சுகாதாரத் துறையின், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு பிரிவுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement