Advertisement

ஆளுங்கட்சி செயல்பட தி.மு.க., துணை நிற்கிறது!

Share
சென்னை : ''ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது,'' என, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.


அவரது பேட்டி: அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் செல்ல வேண்டிய ஏற்பாட்டில், முதல்வர், இ.பி.எஸ்., இருப்பதால், அவர், மழையால் பாதிக்கப்பட்ட, நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல நேரம் இருக்காது என, கருதுகிறேன்.நிவாரணப் பணிகளுக்கு, தி.மு.க., 10 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில், நான் கொடுக்கவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்படுகிறது.அரசின் சார்பில், அவர்கள் நிதி ஒதுக்கப் போகின்றனர். அதை, முதல்வர், தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க போகிறாரா;


மக்களின் வரிப்பணம் அது. விளம்பரத்திற்காக, நான் ஆய்வு நடத்தியதாக, ஆளுங்கட்சியினர் விமர்சனம் செய்வதை பற்றி கவலைப்படவில்லை. ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது. இவ்வாறு, ஸ்டாலின் கூறினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரள மக் களுக்கு, நேற்று, 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிவாரணப் பொருட்கள் அடங்கிய, 10க்கும் மேற்பட்ட லாரிகளை, கொடியசைத்து, ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • blocked user - blocked,மயோட்

  எச்சில் கையால் காக்கா கூட ஓட்டாத திமுகவிடம் இருந்து எப்படி பணம் வரும்...

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஸ்டாலின் முதலில் இது செயல்படாத அரசு என்று புலம்பி கொண்டிருந்தவர் இப்போது ஆளுங்கட்சி செயல்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். அடுத்து முதலமைச்சர் லண்டனுக்கு செல்வது ஸ்டாலின் மாதிரி மெடிக்கல் செக் அப்புக்கு அல்ல. முதல்வர் லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இன்பசுற்றுலா செல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் பெறுவதற்காக என்பதை மறைத்து அதை நக்கலாக சொல்கிறார்.

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  ஐ.நா. சபையே சுடலையை கேட்டுத்தான் முடிவு எடுக்கிறது.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  நின்று தான் ஆக வேண்டும்.உங்கள் எம்.எல்.ஏக்கள் கழட்டத்திஜில் இருக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று ஒவ்வொருமந்திரிகளிடமும் கெஞ்சி கேட்கும் போது அவர்களின் தயவு உங்களுக்கு தேவைதானே. என் உன் அப்பனை புதைக்க இடம் கேட்டு கண்ணீர் விட்டாயே அதுவும் ஒரு உதவி தானே. நிதி கொடுப்பது மக்களின் வரிப்பணம். இதை சொல்ல நீ யார். இதுவே உன் ஆட்சியாய் இருந்தால் எவ்வளவு ஆட்டையை போட்டிருப்பாயோ.எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது,?? மிக மிக சரியான ஒப்புதல் ஓரளவுக்கு செயல்பட முழுவதுமாக அல்ல???எவ்வளவு உயர்ந்த உள்ளம் தான் குறை கூறுவதை வழக்கமாகக்கொண்டுள்ளதை இதைவிட யாரும் இவ்வளவு நல்லவிதமான சுயமாக ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்???கூமுட்டை சுடலை மாயாண்டி சுடலை தான் .

Advertisement