Advertisement

தோற்றாலும் கை விட மாட்டேன்

புதிய நீதி கட்சி நிறுவன தலைவர், ஏ.சி.சண்முகம், வேலுாரில், நிருபர்களிடம் கூறுகையில், 'நான், வேலுார் லோக்சபா தொகுதியில் நுாலிழையில் தோல்வி அடைந்தேன். இதனால், மக்களுக்கு பணி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இது, வேலுார் தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. வெற்றி பெற்ற, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், மக்களுக்கு எந்த பணி செய்யப் போகிறார்?


'வேலுார் தொகுதி மக்கள், என்னை கை விட்டாலும், நான் அவர்களை கைவிட மாட்டேன். நான், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான, வேலை வாய்ப்பு முகாம், 1,000 இலவச மருத்துவ முகாம்களை, மாவட்டம் முழுவதும் நடத்துவேன். குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில், இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டு கிடைத்தது' என்றார்.


மூத்த நிருபர் ஒருவர், 'வேலுாருல தோற்றாலும், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என, சண்முகம் சொல்றாரே' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், 'கஜினி முகம்மது போன்று, எத்தனை முறை படையெடுத்தாலும், வேலுார் தொகுதியை பிடிச்சு காட்டுவாரு' என்றபடி நடையை கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement