Advertisement

இந்தியா வளர்ந்த நாடு: டிரம்ப் கணிப்பு

பென்சில்வேனியா: இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. ஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன.
உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும். இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • spr - chennai,இந்தியா

  இந்த நினைப்பு இந்த நாட்டு மக்களுக்கு, மக்களின் தலைவர்களாக முயலும் பலருக்கும், வரட்டும். இந்த நாட்டில் அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல், முறையாக நிர்வாகம் செய்ய முயன்றால், சுயநல அரசியல்வியாதிகள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டால், நம் நாடு முன்னேறிய நாடே ஆனால் இன்னமும் பல வகையிலும் மான்யம் சலுகை இட ஒதுக்கீடு, வாக்களிக்க துட்டு என எதிர்பார்க்கும் மக்களும் மாறி, தன்மானத்துடன் பிழைக்க முயற்சி செய்தால், சுயநலமாக அவர்களை மூளைச்சலவை செய்யும் அரசியல் கழிசடைகளும் ஒழிந்தால் இந்த நாடு பல முன்னேறிய நாடுகளுக்கு உதவி முடியும் பங்குச் சந்தை முதலீடு நாட்டின் வளமல்ல தொழிற்சாலைகள் அதிகரித்து, உற்பத்தித் திறன் அதிகரித்து, இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும். அதற்கு உதவும் அரசுக்கு நாம் உதவ வேண்டும் குறைகள், நன்மைகள் என இருந்தாலும் "குணம் நாடிக்குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்ற வகையில்அதில் எது அதிகம் " ஒட்டு மொத்த சமுதாயமும் பலன் பெரும் எனப் பார்த்து அரசினைப் பாராட்ட வேண்டும்

 • Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா

  இந்தியா வளரும் நாடு. இன்னும் வளரும். கவலை வேண்டாம் டிரம்ப் அவர்களே.

 • RAJAS - chennai,இந்தியா

  ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையின் படி இந்தியாவில் 36 .3 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்றனர். அதாவது ஒரு நாளைக்கு 47 ரூபாய் கூட (நகரத்தில் 47 கிராமத்தில் 32 ) வருமானம் ஈட்ட முடியாத சூழல். கிட்டத்தட்ட 35 கோடி பேர் ஒரு வேளை உணவு இல்லாமல் உறங்க செல்கின்றனர். எங்கள் அரசியல்வாதிகள் வாழ்க்கையை வைத்து மக்களை எடை போட கூடாது.

 • venkatan - Puducherry,இந்தியா

  The economic guru's statement is not necessary.The reversal of economics is inevi in long run.In manufacturing sector beats china,the stabilised indian economies are enviable to the head of such super powers.

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  எல்லா நாட்டு தலைவர்களும், மக்களும் அவங்க நாட்டு நலனை மட்டுமே தங்கள் எண்ணம் மற்றும் செயலில் வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவுலதான், மாக்களும் (எழுத்து பிழை இல்லை ), தலைவர் என்ற பெயரில் பொறுக்கிகளும் (ஒட்டு மற்றும் திருட்டு பணம் ) தொண்டர் என்ற பெயரில் (எச்ச சாராய மற்றும் மிச்ச பிரியாணி )வீரர்களும் சொந்த நாட்டுக்கே எதிராகவும், துரோகமாகவும் , முக்கியமாக எதிரி நாட்டுக்கு ஆதரவாகவும் கருத்து வாந்தி எடுக்கிறார்கள். மீடியா என்ற பெயரிலும், உரிமை என்ற பெயரிலும், சிறுபான்மை என்ற பெயரிலும் மற்றும் படைப்பாளிகள் (அந்த 49 உயிரினங்கள் ) என்ற பெயரிலும் உரிமம் பெற்று இந்த காரியத்தை (சொந்த வீட்டு சாப்பாட்டில் விஷம் வைக்கும் ஈன பிறவிகள் ) செய்கின்றனர். இதை தங்கள் சொந்த மீடியாவில், தங்கள் வீட்டு வேலையாள்கள் மூலமாக வீதியில் கடை பரப்புகிறார்கள். என் இனிய தமிழினம் அதை உச்சி மோர்ந்து கட்டி யணைத்து கண்கள் பணிக்க இதயம் இனிக்க ஏற்றுக்கொள்கிறது. இதனால்தானோ என்னவோ, எங்களை அடிமையாகவே வைத்திரு என்று எழுத்து மூலம் கோரிக்கை (வெள்ளைக்காரனுக்கு) வைத்த தருதலைகளெல்லாம் தலைவர்களாகி காக்கைக்கு கழிவிடமாகி சிலையாக சாட்சிக்கு வீதி தோறும் நிற்கின்றனர். என் தாழ்ந்த தமிழினமே, இங்கே பார், ஒரு தலைவனை, (ஆம், டிரம்ப் அமெரிக்காவின் மக்கள் ஆதரவு பெற்றவர் ) தன் நாட்டு நலனுக்காக, தன்னை பிற நாட்டவர் கேலி பேசுவர் என்று தெரிந்தும், பொய்யை மட்டுமே பேசுகிறார். ஆம், அவர் பேசுவது பொய் பல நேரங்களில் என்றாலும், அவர் தன் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் துணிந்து பேசுகிறார். என் இனிய தமிழினமே, நீ ஏன் பரிணாம வளர்ச்சியில் பிற்படுத்தப்பட்டவனாய் இருக்கிறாய் ? ஓ, இட ஒதுக்கீடு , உள் ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்று குடுத்து உனக்கு , 'பிற்படுத்தப்பட்ட' என்ற வார்த்தை மேல் அலாதி பிரியமோ.? வரலாறு உன்னை மன்னிக்காது. தயவு செய்து, உன்னை சுய பரிசோதனை செய்துகொள் தமிழினமே. உடனடி தேவை இலவச உப்பு (ரேஷன் மூலம்) திட்டம். எடப்பாடி சார், ப்ளீஸ், நீங்க சொன்ன அந்த கருத்து ' பூமிக்கு பாரம்' வரலாறு சார். ப்ளீஸ் உப்பு ரேஷனில் போடுங்களேன். நம் இனம் உப்பு போட்டு சோறு சாப்பிடட்டும்.

  • Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ

   உண்மையான தமிழனின் வேதனை மற்றும் குமுறலின் வெளிப்பாடு இது.. என்று அவன் " மப்பு " தெளியுமோ . என்று தமிழ் நாடுக்கு விடிவு காலம் பிறக்குமோ ஆண்டவனுக்கு தான் தெரியும்

Advertisement