Advertisement

கொஞ்சம் அசந்தா போதும்!பார்க்கிங் பணத்துல பங்களா கட்டிருவாங்க

கோவை:கோவை, டவுன்ஹால், ராஜவீதி மற்றும் டி.கே.மார்க்கெட் வாகன நிறுத்துமிடங்களில், மாநகராட்சி நிர்ணய கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய, வருவாய் பிரிவினர் வேடிக்கை பார்க்கின்றனர்.
கோவையில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் மாநகராட்சி சார்பில், வாகன நிறுத்துமிடங்கள் நடத்தப்படுகின்றன. சைக்கிள் நிறுத்த ரூ.2, இரு சக்கர வாகனம் ரூ.5, கார் நிறுத்த ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோடு வாகன நிறுத்துமிடத்தில், 3 மணி நேரம் நிறுத்த, இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங்களில், 6 மணி நேரத்துக்கு வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.ஆனால், டவுன்ஹால் வாகன நிறுத்துமிடத்தில், கார் நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது.
கொடுக்கப்படும் ரசீதில், தொகை அச்சிட்டுள்ள இடத்தில், கருப்பு நிற ஸ்கெட்ச்சால் நேரத்தை குறிப்பிட்டு, மறைத்து விடுகின்றனர்.அதனால், மாநகராட்சி நிர்ணயித்த தொகை எவ்வளவு என, வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. ரசீதில், 24 மணி நேரத்துக்கு, 80 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 6 மணி நேரத்துக்கே, 90 ரூபாய் வசூலிக்கின்றனர்.சுற்றுப்பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு, ஏராளமானோர் வாகனங்களில் வருகின்றனர். வாகனம் நிறுத்த போதிய வசதி இல்லாததை பயன்படுத்தி, கூடுதலாக வசூலிக்கின்றனர். இவ்வாறு தினமும் பல ஆயிரம் ரூபாய், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
வாகன நிறுத்த கட்டணம் எவ்வளவு, ஒப்பந்ததாரர் பெயர், கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண் மற்றும் முகவரியுடன், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இப்பலகை எங்குமே இல்லை. களஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி வருவாய் பிரிவினரோ கண்டுகொள்வதேயில்லை.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமாரிடம் கேட்டபோது,
''இது குறித்து ஏற்கனவே புகார் வந்துள்ளது. பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. அனைத்து நிறுத்தங்களையும், ஆய்வு செய்ய சொல்கிறேன்,'' என்றார். நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. எடுத்த நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், மாநகராட்சி நிர்ணயித்த கட்டணம் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய போன் எண்களை குறிப்பிட்டு, வாகனம் நிறுத்துமிடங்களில் அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.கொடுக்கப்படும் ரசீதில், தொகை அச்சிட்டுள்ள இடத்தில், கருப்பு நிற ஸ்கெட்ச்சால் நேரத்தை குறிப்பிட்டு, மறைத்து விடுகின்றனர். அதனால், மாநகராட்சி நிர்ணயித்த தொகை எவ்வளவு என, வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. ரசீதில், 24 மணி நேரத்துக்கு, 80 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 6 மணி நேரத்துக்கே, 90 ரூபாய் வசூலிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • David DS - kayathar,இந்தியா

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி bus stand இல் உள்ள அடுக்கு மாடி பார்க்கிங்கில் கடடனம் பற்றி வைக்கப்பட்டுள்ள அறிவிப்பின் மீது கச்சிதமாக காலண்டர் தொங்கும். டு வீலர்க்குக்கு ஆறு ரூபாய் தான் ஆனால் பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். நகராட்சியில் எல்லாருக்கும் மாமூல் தான். அப்புறம் எப்படி நடவடிக்கை எடுக்கப்படும்?

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  அதிமுக அண்ட் திமுக ரெண்டுமே தமிழர்களின் நிரந்தர வில்லன்களே தான் ரெண்டும் காசுவெறிபிடிச்ச அரக்கர்கூட்டம் கலியுகம்லே இதுகளை போன்றவாளே தான் குடி அண்ட் தீனி என்று கொளுத்துகிடக்கானுகள் , இந்த திருடர்கள்கூடடம் ஒழியவே ஒழியாதா நேர்மையான ஆட்ச்சியே கிடையாதா தமிழனுக்கு நேர்மையை விரும்பியிருந்தால் பிஜேபி காறாளே வந்துருக்கமுடியுமே இந்த ரெண்டுகொள்ளையர்களே மூதெய்யாட்டம் போயிருக்கானுக கூடவே பெருந்தலைவர் பிராடுதிலகம் வைகோவும் சேந்துருக்கானே தமிழனுக்கு விமோசனம் இல்லீங்க

 • nicolethomson - bengalooru,இந்தியா

  எல்லா இடங்களிலும் திருடு இதுதான் எட்டப்பனின் கனவு தமிழகம்

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  சென்னையில் உள்ள ஷாப்பிங் மாலில் பார்க்கிங் செஞ்சு பாருங்க..

 • Babu -

  இது அரசுக்கு தெரியவேவவ தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்.ஸ்கெட்ச்சால் அழிக்குமளவு தைரியமளித்துள்ள நீதி மற்றும் காவல் துறைக்கு ஜனநாயக குடிமகன்களின்(சட்ட விரோதங்களுக்கு தைரியமற்ற) வாழ்த்துக்கள்.

Advertisement