Advertisement

ராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்

உதய்பூர்: ''ராம பிரானின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் நாங்கள்,'' என, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'ராமரின் வம்சாவளிகள் யாரேனும் இப்போது உள்ளனரா' என, நீதிபதிகள் கேட்டனர்.


இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., பெண் எம்.பி., தியாகுமாரி, 'நாங்கள், ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; குறிப்பாக, ராமரின் மகன் குசாவின் வாரிசுகள். ராமரின் வம்சாவளி நாங்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால், அவற்றை சமர்ப்பிக்கவும் தயார்' என, கூறினார். இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.


இந்நிலையில், இப்போது, ராஜஸ்தான் மாநிலம், மேவார் - உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங்கும், 'நாங்கள் ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்' என, கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ''ராமரின் வாரிசுகள் பற்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டது, பத்திரிகைககள் வாயிலாக தெரிய வந்தது. நீதிமன்றம், எங்களை நாடலாம். ஏனெனில், நாங்கள் தான், ராமரின் உண்மையான வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; அதற்கான எல்லா ஆவணங்களும், எங்களிடம் உள்ளன,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

  • RSS.Madurai.2019 - Madurai,இந்தியா

    எது உண்மை எது பொய் என்று பொது மக்களுக்கு தெரிய கூடாதுனு , இந்த மாதுரி நியூஸ் மீடியா ல திட்ட மெட்டு வருது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    பாபரின் வாரிசுகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நீதிமன்றம் கேட்க வேண்டும்.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இல்லாத ஒண்ணுக்கு அடிச்சிக்கிறதுல நம்ம ஆளுகளுக்கு நிகர் யாரும் இல்லை நாட்டில் பற்றி எரிகிற விஷயம் எத்தனையோ இருக்கு அது எல்லாம் இவனுகளுக்கு தெரியாது

  • Indhuindian - Chennai,இந்தியா

    இதிஹாசத்தின்படி ராவணன் அரக்கன் ஆனாலும் பிறவியில் அந்தணன். ஆனால் இங்கு அந்தணனை தூஷிக்கும் திராவிட கூட்டம் ராவணனை அவர்களது தாயாதி என்கின்றனர்.

    • RSS.Madurai.2019 - Madurai,இந்தியா

      இதிஹாசம் தெரியாத முட்டாள்.

  • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

    செல்வி ஜெயலலிதா அவர்கள் இறந்த பின் சிலர் நான்தான் அவர் உண்மையான வாரிசு என்று சொல்லி வந்தார்கள் பிறகு போனார்கள்.அதேபோல் இல்லாமல் இருந்தால் சரி

Advertisement