Advertisement

அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினி

காஞ்சிபுரம்: நள்ளிரவில் அத்திவரதரை நடிகர் ரஜினி தரிசித்தார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நள்ளிரவில் நடிகர் ரஜினி, மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி லதா, தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அத்தி வரதரை தரிசித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    வரிசையில் கால்கடுக்க நின்று தரிசித்தாரா?

  • R.Subramanian - Chennai,இந்தியா

    ரஜினி திராவிட அரசியல்வாதிகளை போல் வேஷம் போடாமல் நேர்மையாக நடந்துகொள்கிறார்... இவரை போன்ற நல்லவர்கள் அரசியலில் வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு நல்லது ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை. காரணம் இவர் ஹிந்து மதத்தை வெளிப்படையாக வழிபடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக பலர் இவர் மீது வெறுப்பை விதைக்கிறார்கள். அரசியலில் ரஜினி தோல்வி அடைந்தால் அது பொய் நேர்மையின்மைக்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கும்.

  • Yezdi K Damo - Chennai,இந்தியா

    விக்கிரமாதித்தா, இந்த நிகழ்வினால் அத்திவரதருக்கு பெருமையா அல்லது ரஜினிகாந்த்துக்கு பெருமையா ? சரியான விடை சொல்லாவிடில் உன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று வேதாளம் சொன்னது .

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      இந்த அசிங்கங்களை கண்டு மிரண்டு தான் அத்தி வரதர் குளம் சாக்கடை போல இருந்தாலும் பரவாயில்லை என்று 40 வருஷம் அங்கே போய் மூழ்கி நிம்மதியாக இருக்கிறார்.

  • தமிழன் -

    அவர் தெய்வ பக்தி உள்ளவர் சாமி தரிசனம் செய்யலாம் .....ஆனால் சுடலை மனைவி , ஓசி சோறு மணி குடும்பத்தினர் ஏன் செய்தனர் .... ???

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      தெய்வம் பாராபட்சம் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது தெய்வமும் இல்லை.. அருகில் நின்று பார்த்தவனை விட வர முடியாமல் தவித்து மனதில் உருகும் ஏழைக்கு தான் அருள் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. அப்படிப்பட்ட கடவுளை நம்புவதே மேல்.

  • Karunan - udumalpet,இந்தியா

    எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிற லட்சக்கணக்கான மூடர்கள் ..மாலும் மனிதன் மறையோனும் மனிதன் ..ஆலம் உண்ட கண்டன் அவன் மனிதன் ..சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார் கற்றறிந்தார் இல் ...

Advertisement