Advertisement

ராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே! ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்

புதுடில்லி: 'அயோத்தியில், ராமபிரான் பிறந்த இடமே, வழிபாட்டு தலம் தான்; எனவே, அதை பல பிரிவுகளாக பிரிப்பது, வழிபாட்டு தலத்தின் புனிதத்தை சிதைப்பதற்கு சமமானது' என, ஹிந்து அமைப்பான, ராம் லல்லா விராஜ்மன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.


உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

மேல் முறையீட்டு மனு:இந்த விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலத்தை, மூன்று பிரிவுகளாக பிரிக்கும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், தினந்தோறும் நடக்கிறது. ஐந்தாவது நாள் விசாரணை, நேற்று நடந்தது.


சர்ச்சைக்குரிய நிலம் நேற்றைய விசாரணையின் போது, ஹிந்து அமைப்பான, ராம் லல்லா விராஜ்மான் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 'சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரும்போது, அதிலிருந்து, முஸ்லிம் அமைப்பை மட்டும், எப்படி வெளியேறச் சொல்ல முடியும்' என, கேள்வி எழுப்பினர்.


இதையடுத்து, சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டதாவது: அயோத்தியில் ராம பிரான் பிறந்த இடமே, வழிபாட்டு தலம் தான். புனிதமான இடமான அதை, தெய்வமாக கருதி, கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். கடந்த, 1,500களில், பாபர் மசூதி அங்கு கட்டப்பட்டது. ஆனாலும், ஹிந்துக்கள் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தி வந்தனர். மேலும், அந்த மசூதி, பாபருடையது என்பதை முஸ்லிம்கள் நிரூபிக்கவில்லை.


ராம பிரான் பிறந்த இடத்தை, தெய்வமாக கருதி வழிபட்டு வரும் நிலையில், அந்த இடத்தை மூன்று பிரிவுகளாக பிரிப்பது, அந்த இடத்தின் புனிதத்தை சிதைப்பதற்கு சமம். 'மெக்கா எப்படி, முஸ்லிம்களுக்கு புனிதமான இடமோ, ஜெருசலேம் எப்படி, கிறிஸ்தவர்களுக்கு புனிதமான இடமோ, அதுபோல், அயோத்தி, ஹிந்துக்களுக்கு புனிதமான இடம்' என, முஸ்லிம்கள் சிலரே சாட்சியம் அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் வாதிட்டார். இதையடுத்து, வாதம் தொடர்ந்து நடந்தது. இன்றும் விசாரணை நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

  No one is owner of the property. Build a park for children. All children will play. God lives inside us.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  இராமர் கோவிலை சீக்கிரம் கட்டுங்கப்பா. இனியும் இதற்காக உயிர் பலி குடுக்க வேண்டாம்... வாழ்க தமிழ்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்....

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  ராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்.மிக நல்ல செய்தி மக்களின் மதநம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிடமுடியாது .இது குறித்து சிறிய பதிவு -பாபர் மசூதி இடிப்பு இந்திய மதசார்பின்மை தத்துவம் எனும் பட்டு வேஷ்டியில் ஒரு கரும் புள்ளி தான் .இந்தியாவின் மதசகிப்புத்தன்மையின் நம்பக தன்மையின் மீது விழுந்த இடி தான்.இதற்க்கு மாற்று கருத்து இல்லை .அது போல பாபர் மசூதி இடிப்புக்கு பழிக்குப்பழி என்று மும்பையில் குண்டு வெடிப்புகள் நடந்ததுவும் முஸ்லீம் மதசகிப்புத்தன்மையின் மீது விழுந்த கரும் புள்ளி தான் .பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 27 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அது குறித்து பதிவு. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மதசார்பின்மை இந்தியாவில் பாப்ரி மசூதி இடிப்பை சொல்லி ஹிந்து நம்பிக்கைகளை குறை கூறுவது /பிஜேபியை இளிவரல்கள் செய்வார்கள் என்று தெரியவில்லை ? பாபர் மசூதி இடிப்பு மிக மிக தவறு தான் .அதில் மாற்று கருத்து இல்லை இல்லை .ஆனால் அந்த தவறை மட்டும் சுட்டி காட்டி இந்தியாவில் பிஜேபியை இன்னும் மதக்கலவரத்தை தூண்டுகிறது என்று சொல்லுவோர் தாவூத் இப்ராஹிம் குண்டுகள் வைத்து ஆயிரம் பேரை கொன்றதை கண்டித்தது உண்டா ? சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பட டைரக்டர் அமீர் இதை போன்றதொரு கருத்தை ஒரு முஸ்லீம் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார் - அவர் கூறியதாவது - பாபர் மசூதி இடிப்பு கி பி 1992 இல் நடந்தது .அது நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது .இந்த 25ஆண்டுகளில் முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் கட்டிய மசூதிகளுக்கு பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆம் பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆயிரக்கணக்கான பாபர் மசூதிகள் வந்திருக்கும் என்றார் .யோசித்து பாருங்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே .இந்திய முஸ்லிம்களின் மூதாதையர் ஹிந்துக்கள் தான் .இதை யாரும் மறுக்கவோ ,மாற்றவோ முடியாது .ஏதோ பாப்ரி மசூதி இடிப்பு காரணமாக முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட்டார்கள் என்று கூறுவோர் ஒன்றை கருத்தில் கொள்க - இந்தியா ஒரு வேளை முஸ்லீம் நாடாக ஒரு சிரியா அல்லது ஈராக் போன்று கடந்த அறுபது வருடங்கள் இருந்திருந்தால் சிறுபான்மை ஹிந்துக்கள் கதி என்னவாக இருந்திருக்கும் ? இந்தியாவில் ஹிந்து கோவில்களும் கிருஸ்துவ சர்ச்சுகளும் ஒன்றாவது இன்று மிஞ்சிருக்குமா ? நினைக்கவே பயமாக உள்ளது. இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களுக்கு நிகராக நடத்தப்படுகிறார்கள் .பல முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் பெண்களுக்கு ஓட்டுரிமை ,படிப்புரிமை மதத்தின் பேரால் தடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அத்தகைய கொடுமைகள் இன்றி ,முஸ்லீம் பெண்கள் அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கின்றனர் . ஆதலால் தான் முத்தலாக் முறையை ஒழிக்க மோடிஜி சட்டமியற்றினார் .உண்மையிலே பிஜேபி கட்சி மற்றும் அதன் தலைவர் மோடிஜி அவர்கள் முஸ்லிம்களிடம் கனிவும் ,அன்பும் தான் பாராட்டுகிறார் இந்த விஷயத்திற்காக பிரதமர் மோடிஜி அவர்களை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும் .2016 வருடம் ஜூன் மாதம் முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் 1600 கோடிகள் செலவில் கட்டப்பட்ட சல்மா அணை /சமாதான அணை திறந்து வைத்தார் அதன் பக்கத்து முஸ்லீம் நாடு பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தானுக்கு குண்டுகள் வைக்க தீவிரவாதிகளை அனுப்புகிறது .ஆனால் பிரதமர் மோடிஜி அன்புக்கரம் நீட்டுகிறார் .முஸ்லிம்களுக்கு மிலாடி நபி ,ரம்ஜான் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தார் அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு பிஜேபி மதவாத கட்சி. கேட்டால் ஹிந்துத்வாவை அது ஆதரிக்கிறது என வெற்று /வெறும் கூச்சல் தான் வரும் .ஆனால் உண்மை /நிதர்சனம் என்னவென்றால் பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் ஆம் .பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் என ஒரு தேர்தலில் ஹிந்துக்கள் முடிவெடுத்தாலே போதும் - இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிஜேபி மட்டுமே மத்தியிலும் ,மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும். ஆனால் ஹிந்துக்கள் அப்படி செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டார்கள் .காரணம் ஹிந்துக்களின் மத சார்பின்மை /மத சகிப்பு தன்மை தான் காரணம். அப்துல் கலாம் அவர்களை இந்திய நாட்டின் ஜனாதிபதியாய் அழகு பார்த்தது பிஜேபி வாஜ்பாய் அரசு தான். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை ஹிந்து ஜனாதிபதியாக ஆக முடியாது. அப்படி இருந்தும் பிஜேபி மதவாத கட்சி. பிஜேபி கட்சியில் அனைத்து மதத்தவர் இருந்தாலும் அது மதவாத கட்சி மற்றும் வகுப்பு வாத கட்சி ஆனால் முஸ்லிம் லீக் ,மனித நேய கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய ஒரே ஒரு மதத்தினர் மட்டும் உள்ள கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள். என்ன கொடுமை சரவணன் இது ?.கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துவ சர்சுகள்,கிருஸ்துவ திருச்சபைகள் ,பேராயர்கள் மூலமாகவும் மற்றும் தமிழகமெங்கும் முஸ்லிம் ஜமாத் மூலமாகவும் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை திமுக அள்ளினாலும் அது மத சார்பின்மை கட்சி ஆம் அக்மார்க் மத சார்பின்மை கட்சி.இது தான் காலத்தின் கொடுமை. முஸ்லிம்களுக்கு மோடிஜியை பிடிக்காது .இந்தியாவையும் பிடிக்காது .பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி .உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன. இவர்கள் பாக்கிஸ்தான் சொர்க்கம் ,இந்தியா நரகம் என்ற உன்னத மார்க்கத்தை சேர்ந்தவர்கள். பிரதமர் மோடிஜியின் செயல்களை மட்டமான ரகத்தில் சித்தரிக்கும் கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் .இவர்களின் கேடு கெட்ட புத்தியை தெரிந்து கொள்ள இவர்களிடம் பிரதமர் மோடிஜி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் நலமாக வாழ்கிறார்களா ? என்று வினவி பாருங்கள் .உடனே அவர்கள் பிறழ் முரணாக ஈரான், ஈராக் ,சிரியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவர்களை விட இங்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் கொடுமையான ,அடக்கு முறையிலான ,சுதந்திரமற்ற வாழ்க்கை வாழ்வதாக கூசாமல் சொல்லுவார்கள். அவ்வளவு ஏன்? இப்போது பயங்கர போர் நடந்து முடிந்த இராக்கின் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உருக்குலைந்த மொசூல் நகரத்தில் வாழும் முஸ்லிம்கள் ,இந்தியாவில் மதவாத பிஜேபி அரசில் வாழும் முஸ்லிம்களை விட மிக மிக வசதியான ,பாதுகாப்பான ,அமைதியான சூழலில் வாழ்வதாக வாதிடுவார்கள். இவர்கள் பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் "பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு இந்தியா கி பி 1947 இல் சுதந்திரம் பெற்ற போது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ( ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ) மற்றும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ( முஸ்லிம்கள் எண்ணிக்கையில் )ஒரு வேளை இருந்திருந்தால் இந்தியா இது போன்ற மதசார்பின்மை நாடாக கி.பி 2019 ம் ஆண்டுவரை இருந்திருக்குமா ? இல்லையே பாகிஸ்தான் போன்று பழமை வாத /மத வாத இஸ்லாம் நாடாக இந்தியா மாறியிருக்கும் - தாலிபான் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் ,அல் கொய்தா அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் லஷ்கர் இ தொய்பா ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் ,மற்றும் ஐஸ்ஐஸ் அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள என இந்தியா பாகிஸ்தானைவிட மிக பயங்கரவாத நாடாக மாறியிருக்கும் .அல் கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் 1700 வருடங்கள் பழமையான முன்னூறு அடிகள் உயரமான பௌத்தர் சிலையை பீரங்கிகள் கொண்டு சில்லு சில்லாக உடைத்ததை ஹிந்துக்கள் நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ தூக்கில் இடப்பட்டு ராணுவ ஆட்சி வந்ததை - ஜியா -உல் -ஹக் ராணுவ ஆட்சி வந்தது மற்றும் ,பெனாசீர் பூட்டோவை சிறையில் அடைத்து ராணுவ தளபதி முஷாரப் ஆட்சிக்கு வந்ததையும் நாங்கள் அறிவோம் பாகிஸ்தானில் கி.பி 1947 ம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஹிந்து கோவில்களும் ,கிருஸ்துவ சர்ச்சுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது .அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டது என்பதுதான் உலகம் அறிந்த வரலாறு .பாகிஸ்தானில் கராச்சியில் குண்டு வெடிப்பு ,பெஷாவரில் குண்டு வெடிப்பு என்று செய்தி வராத நாட்கள் குறைவு .ஆனால் இந்தியா அமைதி பூங்காவாக உள்ளது .இந்தியாவில் ,இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சிறுபான்மை முஸ்லிம்கள் எத்தனையோ இடங்களில் தர்காக்களும் ,மசூதிகளும் கட்டியுள்ளனர் .அதை போன்று இந்தியா முஸ்லீம் நாடாக இருந்திருந்தால் அதே எண்ணிக்கையில் சிறுபான்மை ஹிந்துக்கள் கோவில்கள் ,சிறுபான்மை கிருஸ்துவர்கள் சர்ச்சுகள் கட்டியிருக்க முடியுமா ?இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் .எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும். பழமைவாத முஸ்லீம் நாடுகளில் வாழும் மக்களை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நல்ல நிலையில் இல்லை என்று பிறழ் முரணாக பேசும் பிரிவினைவாத தலைவர்கள் பேச்சை இந்திய முஸ்லிம்களே புறம் தள்ளுங்கள் .JULY 2019 தினமலர் செய்தி பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல் - பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் முஸ்லீம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.ஆம் அத்தகைய முஸ்லீம் பழமைவாத நாட்டின் பிரதமரை விட பிரதமர் மோடிஜி தாழ்ந்தவர்/மதவாதி என சித்தரித்து ,பாகிஸ்தான் சொர்க்கம் இந்தியா நரகம் என்று சொல்லி இந்தியா மீது வெறுப்பை உமிழும் பிரிவினைவாத தலைவர்களை இந்திய முஸ்லிம்களே உதாசீனம் செய்யுங்கள் ..உலகின் மற்ற எந்த நாட்டிலும் விட இந்தியாவில் தான் சிறுபான்மையினர் மோடிஜி ஆட்சியில் பெரும்பான்மையினருக்கு நிகராக நடத்தப்படுகின்றனர் .இஸ்லாமிய அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது வாஜிபாய் பிஜேபி அரசு .தலித் ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி என அழகு பார்த்தது மோடிஜி பிஜேபி அரசு.மோடிஜி ஆட்சியில் சிறுபான்மையினர் சுதந்திரமாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர் .எந்த பாதிப்பும் இல்லை .பசுக்குண்டர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அதனால் தான் சூளுரைத்தார் .இந்தியாவில் பிஜேபி /மோடிஜி குறித்து போலிமதச்சார்பின்மை வாதம் பேசி சிறுபான்மையினரை வெறுமையிலும் ,பதற்றத்திலும்,அச்சத்திலும் ஆழ்த்தி அவர்களின் ஓட்டுக்களை பெறுவதில் மதசார்பின்மை கட்சிகள் முன்னணியில் உள்ளன.அது முற்றிலும் தவறு .தினமும் குண்டுகள் வெடிக்கும் சிரியா ,பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் உள்ளனர் .உதாரணத்திற்கு ,கடந்த ஐந்து வருடங்களில் மத்திய பிஜேபி அரசினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள் நடத்தும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஏதாவது உண்டா ? இல்லையென்றால் சிறுபான்மை கல்விநிறுவனங்களில் மதவாத பிஜேபி அரசால் அட்மிஷன் குறைந்ததாக செய்திகள் உண்டா ? கிடையவே கிடையாது .முஸ்லிம்கள் ,கிருஸ்துவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் /வர்த்தக நிறுவனங்கள் எதற்காவது பிஜேபியினால் பாதிப்பு உண்டா ? மேலும் கடந்த ஐந்து வருடங்களில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகள் எழுதி ,தேர்வாகி ஆனால் பதவி மறுக்கப்பட்ட சிறுபான்மையினர் உண்டா ? அல்லது மத்திய அரசில் பணியாற்றும் சிறுபான்மையினருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதா ? பதவி பறிக்கப்பட்டதா ? இல்லையே .கடந்த ஐந்து ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் ஒரு சிறுபான்மையினராவது தாய்மதம் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டனரா ? இல்லையே போன மாத செய்தி -பாகிஸ்தானில் ஹிந்து சிறுமியர் கட்டாய மதமாற்றம் மற்றும் - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இருபத்துஐந்து ஹிந்துக்கள் முஸ்லிம்களாக வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றனர் இந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வு சிறுபான்மையினருக்கு கடந்த ஐந்து ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நிகழ்ந்ததே இல்லை.மோடிஜி ஆட்சியில் மதக்கலவரங்கள் நடைபெறவே இல்லை .இதனை மதம் மாறிய ஹிந்துக்களும் ,மதம் மாறாத ஹிந்துக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.போலிமதச்சார்பின்மை பேசும் கருப்பு தாலிபான் ,சிவப்பு தாலிபான் ,காங்கிரஸ் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.மேலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு இடர் என்றாலும் ,ஐரோப்பா நாட்டில் ஏதோ ஒரு கிறுக்கன் எப்படியோ வரைந்த கார்ட்டூன் ஓவியம் ஒரு சாரர் மதத்தை இகழ்ந்துவிட்டது என்பதனாலும் ,சிரியாவில் அமெரிக்கா படை ஆக்கிரமிப்பு பகுதிகளில் தீவிரவாதிகள் மேல் குண்டுகள் பொழிந்தாலும் ,பர்மாவில் ரோஹிங்யா அகதி முஸ்லிம்கள் பிரச்சனை என்றாலும்,நான்கு மாதங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஹாலிவுட் படத்தில் ஒரு சாரர் மதம் தவறாக சித்தரிக்கப்பட்ட செய்தி தெரிந்து விட்டாலும் இங்கு இந்தியாவில் அதுவும் அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும் அன்புமார்க்கத்தினர் முஸ்லீம் நாடுகளில் உள்ள சிறுபான்மை மதத்தினரை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நல்ல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும்.ஆம் எதெற்க்கெடுத்தாலும் பாபரி மசூதியை காரணம் காட்டுவது - பிஜேபியை குறைகள் சொல்லுவது /கேலிகள் செய்வது - மட்டுப்படும் புரிந்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாக மாறும்.

  • S Kalyanasundaram - Chennai,இந்தியா

   If you know the answer write point-wise. If you don't know the answer write paragraph-wise.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  நம் நாட்டின் ஆதி காலத்தில் இன்ன காலம் என வரையறுக்க முடியாதபடி தோன்றியது சனாதன ஹிந்து தர்மம் அதிலிருந்து தோன்றிய சமண பௌத்த சீக்கிய மதங்களை கொண்டுள்ளது தான் நம் நாடு என்பது நம் நாட்டின் வரலாற்றை பார்த்தாலே தெரியும். இஸ்லாமிய மதம் இஸ்லாமிய நாட்டு மன்னர்களின் படையெடுப்பினாலும் பின்னர் நம் நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களின் வாள் முனையில் கட்டாய மத மாற்றங்கள் நிகழ்ந்தது வரலாறு. இயேசு நாதரின் சீடர்கள் செயின்ட் தாமஸ் மற்றும் பின்னர் கடற்வழி கன்டுபிடித்து வந்தவர்களான வாஸ்க்கோடகாமா போன்றவர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்துவ மதம் மாறியவர்கள் என மத மாற்றம் நிகந்ழ்ந்ததால் நம் நாட்டின் மதங்களை இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று ஹிந்துக்களாக இருப்பவர்கள் மற்றொன்று ஹிந்துக்களாக இருந்தவர்கள். ஆகவே எல்லா மத வழிப்பட்டு தலங்களும் பின்னர் காலப்போக்கில் ஹிந்து மதத்தை அழிக்க நினைத்து தோன்றியதே இந்த வழக்கில் இது போன்றவரலாற்று நிகழ்வுகள் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிகின்றபோது ஏன் நீதிமன்றங்கள் தீர்ப்பை சொல்ல காலம் தாழ்த்துகின்றன. அனைத்து மத சடங்குகளும் நம்பிக்கையின்பாற் தோன்றியதே. ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கு இப்போது நிச்சயம் ஆதாரம் எல்லாம் கிடைக்காது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது மத நம்பிக்கை சார்ந்த விஷயமாகும், நீதிமன்றம் காலம் தாழ்த்தாமல் பெருவாரியான மக்களின் நம்பிக்கை அடிப்படையில் நல்லதொரு தீர்ப்பினை வழங்க வேண்டும்.

Advertisement