Advertisement

நடிகர் சித்தார்த் மீது போலீசில் பா.ஜ. புகார்

சென்னை: 'காஷ்மீர் விவகாரத்தில் தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி போலீசில் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து அவரது அறிக்கை: நடிகர் சித்தார்த் பல மாதங்களாக பா.ஜ.வை பற்றியும் மத்திய அரசு பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் தன் டுவிட்டரில் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். காஷ்மீர் விவகாரத்தில் அவர் செய்த டுவிட்டர் பதிவில் மத்திய அரசை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார்; தேச விரோத கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.


இது தேசத்திற்கு எதிராக மக்களை துாண்டி விடும் அவரின் குரூர எண்ணத்தை உணர்த்துகிறது. இதுகுறித்து நடிகர் சித்தார்த் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளேன். போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே பேராயர் எஸ்றா சற்குணத்தின் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

  • sankar - Nellai,இந்தியா

    விடுங்கப்பா- அப்பப்ப கூவிட்டு அடங்கிரும்

  • Jayvee - chennai,இந்தியா

    ஸ்ருதியை மீண்டும் பார்க்க மயக்க பினாத்தும் சித்தார்த் ..

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    குரைத்தால் குரைத்துக் கொண்டு போகட்டும். அதனால் நாட்டின் முன்னேற்றம் தடை படாது. இவர்களின் உளறலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பன்றியோடு சண்டை செய்ய சகதிக்குள் விழுவது போல ஆகி விடும். மோடி எங்கே, இந்த மோசடிகள் எங்கே?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    விளங்காத சேதுபதியையும் சித்தம் கலங்கியவனையும் எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும்.

  • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

    இவனெல்லாம் ஒரு ஆளு, அடுத்து விஜய் சேதுபதி அவனும் அரைக்கிறுக்கன்.

Advertisement