Advertisement

அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு! மேலும் 48 நாட்கள் தொடர உத்தரவிடும்படி கோரிக்கை

சென்னை: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க ஆர்வமாக இருப்பதால் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தரிசன நாட்களை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த 78 வயதான தமிழரசி என்பவர் தாக்கல் செய்த மனு: அத்திவரதர் வைபவத்துக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வருவர் என எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் உண்மையான எண்ணிக்கை வேறு. முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. யூகத்தின் அடிப்படையில் கூட்டத்தை எதிர்பார்த்தனர்.


வைபவம் துவங்கிய ஒரு வாரத்தில் அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பக்தர்கள் தெரிவித்தனர். கூட்டத்தை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராகவில்லை. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வைபவம் என்பதால் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. எத்தனை கஷ்டப்பட்டாலும் ஒரு முறையாவது அத்திவரதரை பார்த்து விட மாட்டோமா என பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சராசரியாக ஆறு முதல் ஒன்பது மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். தண்ணீர் உணவு சுகாதார வசதிகள் போதிய அளவில் இல்லை.


லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு எட்டு கழிப்பறைகளை மட்டுமே மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளது; அதிலும் நெடி வீசுகிறது. கோவில் நுழைவு வாசலை எட்டுவதற்குள் பக்தர்கள் சோர்ந்து விடுகின்றனர். நானும் இரண்டு நாட்கள் சென்றேன்; ஏழு மணி நேரம்வரை காத்திருந்தேன். அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினேன். வயதானவர்கள் கர்ப்பிணிகள் மாற்று திறனாளிகளுக்கு கடுமையான அசவுகரியம் ஏற்பட்டது. அவர்களுக்கு தனி வரிசை அமைக்க கோரியதை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. கோவில் வளாகத்துக்குள் தான் சக்கர நாற்காலி வசதி அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கையை எடுக்கவில்லை.


பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசு 29 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. இரண்டு நாட்கள் காத்திருக்கும் வகையில் தகுந்த ஏற்பாடுகளுடன் வரும்படி கலெக்டரே கூறியிருப்பது துரதிஷ்டவசமானது. கூட்டத்தை நிர்வகிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் துரதிஷ்டவசமான சம்பவங்களை தடுத்து இருக்கலாம். நிர்வாகத்தின் தவறால் பக்தர்கள் பெரும்பாலோர் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை.


எனவே கோவில் குளத்துக்குள் 17ம் தேதி அத்திவரதரை வைக்க தடை விதிக்க வேண்டும். பொதுமக்கள் தரிசனத்துக்காக ஒரு மண்டலம் என்ற அளவில் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக நீதிமன்றம் கூடியதும் நீதிபதி ஆதிகேசவலு முன் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி ''லட்சக்கணக்கான பக்தர்கள் இன்னும் அத்திவரதரை தரிசிக்காததால் மேலும் 48 நாட்களுக்கு தரிசன வைபத்தை நீட்டிக்க வேண்டும்'' என்றார். மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மதுரை கிளையிலும் முறையீடு:சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் வழக்கறிஞர் ராஜகோபால் நேற்று ஆஜரானார். அவர் முறையிட்டதாவது: காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் 48 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தினமும் அங்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். சுவாமியை பலர் தரிசனம் செய்ய முடியவில்லை. தரிசனத்தை 108 நாட்களாக உயர்த்த வேண்டும். இதை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் மனு தாக்கல் செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அவர் முறையிட்டார். நீதிபதிகள் 'இவ்விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அங்கு மனு தாக்கல் செய்து நிவாரணம் தேடலாம்' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24 + 54)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எப்போ பார்த்தாலும் வேலை வெட்டி இல்லாத தண்டப்பசங்களுக்கு ஒரே வேலை எதையும் கோர்ட்டுக்கு கொண்டு செல்வது??அத்திவரதா இவங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்றுக்கொடு.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இன்றைக்கு தமிழகத்தில் முக்கிய கடவுள் அத்திவாரதர்தான், அந்நிய சக்திகளுக்காக ஒளித்து வைக்கப்பட்டவர்தான் இந்த பெருமாள் . ஆகவே மீண்டும் குளத்தில் வைப்பது மா பெரும் குற்றம், எது எப்படியோ இல்லையோ தங்க பல்லியை வைத்து பணம் பறிக்கும் கூட்டம் இனி அத்திவாரதர் பெருமாள் குளத்தில் வைக்கப்பட்டாலும் பக்தர்கள் அலை மோதும், இதற்கும் டிக்கெட் போட்டு பணம் பறிக்க தயாராக இருப்பார்கள் நம்மவர்கள், வாழ்க .. வந்தே மாதரம்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மரண வேதனையின் உச்சம். மேலும் இதில் மகாபாவம் 10-12 வயதுள்ள சிறுவர் சிறுமியர். இவர்களை இடுப்பிலோ தோளிலோ தூக்கிச் செல்லவும் முடியாது, கனமாக இருப்பார்கள், அவர்களால் நடக்கவும் முடியாத சூழல், ஒற்றைகாலைத் தூக்கி வைத்துக் கொண்டு குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கும் பொழுது, இதயத்தில் ரத்தம் வடிகிறது// இது நிஜம் என்றால் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு தரிசனத்துக்கு செல்ல வேண்டுமா? தூணிலும் துரும்பிலும் இருக்கும் நாராயணனை நெஞ்சார நினைத்து வீட்டின் அருகில் உள்ள ஆலயங்களில் தரிசித்தால் போறாதா?

  • Endrum Indian - Kolkata,இந்தியா

   மெக்காவில் சென்று கல்லெறிந்து கொண்டே சுற்றி சுற்றி வரலாம்???

 • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

  எந்த நகரத்தையும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை எந்த இறைவனை எங்கு தரிசிக்கவேண்டுமோ அங்குதான் அதை செய்யமுடியும். எங்கும் வழிபடலாம் என்று சொல்வது தவறு.அப்படிப்பார்த்தால் முஸ்லீம் பெருமக்கள் ஏன் மக்காவிற்கு செல்லவேண்டும் இந்தியாவிலேயே தொழுவலாமே ஏன் அங்கு செல்லவேண்டும் மக்காவிற்கு சென்று தொழுகை நடத்தினால் தான் அவர்களுக்கு புனிதம் அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.ஆதி அத்திவரதரை காஞ்சியில் சென்று வழிபட்டால்தான் நமக்கு பலன் கிடைக்கும்.இதை புரிந்துகொள்ளுங்கள்

 • rajj - Thanjavur,இந்தியா

  சரியான திட்டமிடல் இல்லை. இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை போலும், தினமும் லட்ஷக்கணக்கில் பக்தர்ககள் காணும் திருப்பதி, அய்யப்பன் இப்படி எவ்வளவோ கோயில்கள் சொல்லலாம் முடிந்தால் முடியாதது இல்லை. ஆகம விதி என்பது வேறு அனந்த சரஸ் என்பது வேறு. அன்றைய காலத்தில் யாராவது சிலையை கடத்திவிடுவார்கள் அல்லது சேதப்படுத்திவிடுவார்கள் என்பதால் தான் அனந்த சரஸ் செய்யப்பட்ட்து என வரலாறு அப்படியிருக்கும் போது மறுபடியும் அனந்த சரஸ் என்பது . தவறு என்பது எனது தனிப்பட்ட கருத்து. அணைத்து மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நிரந்தரமாய் தனி சன்னதி அமைத்து அத்திவரதரின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பெறவேண்டும்.என்பதே அனைவரின் ஆசைகள்

அத்தி வரதர் வைபவம் ஆக., 16ம் தேதியுடன் தரிசனம் நிறைவு (4)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  எவனும் அத்திவாரதரை தீண்டவே கூட முடியாது இது சத்தியம் பெருமாள் தானே விரும்பி ஏற்றுக்கொண்ட ஜலவாசம் இது அவர் காலத்துலே இருந்தால்தான் மக்களே நம்மளுக்கு நல்ல மழை கொட்டி விளைச்சலும் கூடி செழிக்கும்

 • Uthiran - chennai,இந்தியா

  பொன்னையா மாதிரி இன்னும் நாலு கலெக்டர் இருந்தால் தமிழகம் இன்னும் 'சிறப்பா' இருக்கும்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இதனால் அறிவிப்பது என்னவென்றால், இன்னும் அத்திவரதரை தரிசிக்காத ரௌடிகள், கடவுள் மறுப்பு பேசும் அரசியல்வாதிகளின் மனைவிகள், குட்கா, பான் வியாபாரிகள் விரைந்து வந்து அத்திவரதரை விவிஐபி பாஸ் வாங்கி தரிசனம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 • blocked user - blocked,மயோட்

  மதசார்பற்ற அரசு ஏன் அத்திவரதரை ஓவராக கவனிக்க வேண்டும்? அடுத்து வரும் 40 வருடங்கள் அத்தி வரதரை இவர்கள் திருடாமல் இருக்கவேண்டும்.

அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க முறையீடு (49)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  அத்தி வரதரை குளத்தில் மறைத்து வைத்தால்..... அடுத்த நாற்பது ஆண்டுகளுக்குல்..... அது கூடத் தேவை இல்லை.... நாலு நாள் கூடப் போதும்.... அத்தி வரதர் சிலை மாயமாகிவிடுவார்..... சிலை கடத்தல் பேர்வழிகள் அத்தியைக் கடத்தி பல கோடிகளுக்கு விற்றுவிடுவார்கள்.... அடுத்து நாற்பது ஆண்டுகள் கழித்துத் தானே..... அப்போது சமாளித்துக் கொள்ளலாம் ...

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இந்த அத்திவரதர் வைபவத்தை சொதப்பியது காஞ்சி மாவட்ட நிர்வாகம் அறநிலையத்துறை மற்றும் திராவிட தமிழக அரசு ஆகியவை இன்றைய தினம் சமூக ஊடகங்களது வீச்சு அரசுக்கு தெரியும் அதிகபட்ச பக்தர்கள் வருகை இருக்கும் என்பதும் தெரியும் வீண் வீம்புக்காக ஏற்பாடுகளை ஒழுங்காக செய்யாமல் சொதப்பியது இவர்கள்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு நாற்பத்தெட்டு நாட்களுக்கு கூட்டத்தை சமாளிக்க வரைவு திட்டம் தேவை என்று சொல்லியிருந்தால் அவர்கள் மிக அழகாக அமைத்துக்கொடுத்திருப்பார்கள் எந்த பிரச்சனையும் இன்றி வைபவம் நடந்துகொண்டிருக்கும் ஆனால் வறட்டு கவுரவத்துக்கு தாறுமாறாக வேலை பார்த்தது தமிழக அரசு இவர்களுக்கு CROWD MANAGEMENT பற்றி துளிகூட தெரியாது கடசி கூட்டங்களுக்கு சிறப்பு [ திருட்டு ] பஸ் இயக்குதல் கொக்கி போட்டு மின்சாரம் திருடுதல் கூடுதலாக டாஸ்மாக் கடையில் வியாபாரம் பார்த்தல் தவிர வேறு எதற்கும் லாயக்கற்ற அரசு இந்த தமிழக திராவிஷர்களின் அரசு வெட்கக்கேடு வாஸ்தவத்தில் அத்திவரதர் இவர்கள் மீது கோபம்கொண்டு சாபம் தந்திருக்கவேண்டும்

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இந்த அத்திவரதர் வைபவத்தை சொதப்பியது காஞ்சி மாவட்ட நிர்வாகம் அறநிலையத்துறை மற்றும் திராவிட தமிழக அரசு ஆகியவை இன்றைய தினம் சமூக ஊடகங்களது வீச்சு அரசுக்கு தெரியும் அதிகபட்ச பக்தர்கள் வருகை இருக்கும் என்பதும் தெரியும் வீண் வீம்புக்காக ஏற்பாடுகளை ஒழுங்காக செய்யாமல் சொதப்பியது இவர்கள்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு நாற்பத்தெட்டு நாட்களுக்கு கூட்டத்தை சமாளிக்க வரைவு திட்டம் தேவை என்று சொல்லியிருந்தால் அவர்கள் மிக அழகாக அமைத்துக்கொடுத்திருப்பார்கள் எந்த பிரச்சனையும் இன்றி வைபவம் நடந்துகொண்டிருக்கும் ஆனால் வறட்டு கவுரவத்துக்கு தாறுமாறாக வேலை பார்த்தது தமிழக அரசு இவர்களுக்கு CROWD MANAGEMENT பற்றி துளிகூட தெரியாது கடசி கூட்டங்களுக்கு சிறப்பு [ திருட்டு ] பஸ் இயக்குதல் கொக்கி போட்டு மின்சாரம் திருடுதல் கூடுதலாக டாஸ்மாக் கடையில் வியாபாரம் பார்த்தல் தவிர வேறு எதற்கும் லாயக்கற்ற அரசு இந்த தமிழக திராவிஷர்களின் அரசு வெட்கக்கேடு வாஸ்தவத்தில் அத்திவரதர் இவர்கள் மீது கோபம்கொண்டு சாபம் தந்திருக்கவேண்டும்

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  திருப்பதி பாலாஜியை போல் தமிழகத்திற்கு இந்த அத்திவரதர் கிடைத்துள்ளார். இவரை தரிசனம் செய்துள்ளார் மொத்த தமிழகத்தின் ஜன தொகையில் 1 சதவீதம் கூட இல்லை. இவருக்காக விசேஷமாக பிரத்தியேகமாக செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்களுக்கு சகல வசதிகளுடன் ஸ்வாமியை நிரந்தரமாக பிரதிஷ்டை செய்ய வேண்டும். இது குறித்து நான் தமிழக CM செல்லிற்கு e-மெயில் (தினமலர் உபயம்) அனுப்பியுள்ளேன்.

 • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

  இறைவனை வழிபட அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு.ஆதி அத்திவரதரை வழிபட கால அவகாசம் கொடுக்க நீதி மன்றம் ஆணை பிறப்பித்தால் அதை அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டுமாய் அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம். இறைவனை வழிபட முடியாதவர்களுக்கு வாய்ப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு இறைவன்கூட செவிசாய்ப்பார் தீர்ப்பு சரியாக இருந்தால்.100 ஆண்டுகளை 80 ஆண்டுகளாய் ஆக்கி பிரிக்குதான் 40 ஆண்டுகளாக மாறியது என்கிறார்கள் அப்படி இருக்கும் போது பக்தர்களுக்காக சில நாட்கள் நீட்டித்தால் தவறு இல்லை என்றே தோன்றுகிறது.எது எப்படியோ தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

 • RAMESH - CHENNAI,இந்தியா

  The eagerness will be miss if extended the dates.. i mean whoever missed to see, hope they were eagerly waiting to see Athi varathar @ 2059

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  அத்திவரதர் தரிசனம் ஒன்று நிரந்தரமாக இருக்க வேண்டும் அல்லது 17 ஆம் தேதியே குளத்தில் இறக்கி மறைத்துவிடலாம்.

 • jagan - Chennai,இந்தியா

  "மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கோர்ட் கூறியுள்ளது" - இந்து மத வழக்கத்தில் தலையிட நீதிமன்றம் யார்? இதை சொன்னதற்காகவே, வழக்கத்தை மாற்ற கூடாது

 • Achchu - Chennai,இந்தியா

  எந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்?

 • Jayvee - chennai,இந்தியா

  நீதிமன்றத்தில் இதை விசாரிக்க அத்திவாரதர் ஒன்றும் பி சிதம்பரம் அல்ல ..

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  நமது மாநில அரசு அத்திவரதர் தர்ஷணத்தை பக்தர்களுக்காக நீடிக்கலாம்.காஞ்சிபுரத்தில் இதற்காக சுகாதார முறைகளைநன்றாக கையாண்டு பக்தர்களைசந்தோஷமாகவும்,சமாதானமாகவும் அந்த ஆண்டவனை தர்ஷிக்க அவகாசம் தரவேண்டும்.ஆண்டவனை தர்ஷிக்க கோர்ட் எல்லாம் தேவையற்றது.காலம்மாறிவிட்டது நாமும் பழைய பயனற்ற,அர்த்தமற்ற மரபுகளில் இருந்து மாறு பட வேண்டும் , விடு பட வேண்டும்.பழையதையே பிடித்து தொங்கி கொண்டிருக்காமல் புதிய வழிக்கு திரும்ப வேண்டும்.இதற்கு ஒரு சில அறிவாளிகள் வேறு ஒரு மதத்தவன்நமக்கு அறிவுரை வழங்குவதா என்று வரிந்து கட்டி கொண்டு கருத்து எழுதுவார்கள்.நான் எப்போதுமே எதையுமே வெளிபடையாக எழுதுபவன்.அதை பற்றி எனக்குகவலை இல்லை.இறைவன் எல்லோருக்கும் சொந்தமானவர்.எல்லோரையும் படைத்த பொதுவானவர். a .

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  எங்களுக்கு ஒன்னு புரியலே அது என்ன இந்துக்கள் விஷயத்துக்கு மட்டும் இத்தனை கருத்துக்கள் இதேயே தைரியம் இருந்தால் மற்ற மதங்களுக்கும் சொல்லி பார்க்கட்டுமே இந்துக்கள் மற்றும் அவர்கள் வழக்கத்தை மாற்றுவது மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்கிறது கோவில் மற்றும் அதன் சம்ப்ரதாயங்களை மாற்றுவது முறையல்ல என்கிற பேசிக் அறிவு இல்ல ஜென்மங்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

   மற்ற மத பண்டிகைகளுக்கும்,ஆண்டவனின் தரிசனங்களுக்கும் மீடியாக்கள் இது போன்ற முக்கியம் தருவதில்லை.ஆதனால்தான் யாரும் பொதுவாக கருத்து சொல்வதில்லை.அது தெரியாமல் கருத்து சொல்லும் இது போன்ற ஜென்மங்களை எந்த வகையில் சேர்ப்பது என்பது அந்த அத்திவரதருக்கே வெளிச்சம்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இன்றுவரை நான் தினமும் காலையில் வாக்கிங் செல்லும்போதோ அல்லது கோவிலுக்கு செல்லும் போதோ கைபேசி எடுத்துச் செல்வதே இல்லை. அது எனக்கான நேரம் மட்டுமே என்பதால்.

 • thiruvengadam - kancheepuram,இந்தியா

  நிரந்தரமாக வெளியில் இருக்கும் எத்தனை கோவில்களை நம் மக்கள் தரிசனம் செய்யும் பழக்கம் வைத்து இருக்கிறார்கள். ஆகையால் நாட்கள் நீட்டிப்பு இருந்தால் சுவாமி தரிசனத்தில் சுவாரசியம் இருக்காது.

 • 23m Pulikesi - Chennai,இந்தியா

  இது முழுக்க முழுக்க தமிழக அரசு ஆன்மீக பெரியவர்களையும், அந்த ஆலய அர்ச்சர்கர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுஎடுக்கவேண்டியது தான் சரியான தீர்வு. இதில் நீதிமன்றத்தை நாடுவது சரியில்லை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொவரு வழிபாட்டு முறை இருக்கும் அது அந்த கோவிலின் அர்ச்சர்கர்களுக்கும் மட்டுமே தெரியும்.இதில் நீதி மன்றம் தலையிடுவது சரியில்லை. வேண்டுமானால் அரசுக்கு நம் கோரிக்கையை வைக்கலாம் அவ்வளவே.

  • Achchu - Chennai,இந்தியா

   நீதிமன்றம் சொன்னால் ஏற்க முடியாது அர்ச்சகர்கள் சொன்னால் கேட்டுக்கலாம் அல்லது அஞ்சாயிரம் ஒட்டு அதிகமா "வாங்கிய" அரசு சொல்ல அதிகாரம் இருக்குன்னா என்னே விந்தை ஆக யாரோ ஒருவர் சொல்வதை கேட்கணும் IF WE ARE STRONG, OUR STRENGTH WILL SPEAK FOR ITSELF IF WE ARE WEAK, WORDS WILL BE OF NO HELP.

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  அத்திவரதர் தரிசனத்தை நீடிக்க கூடாது என்று காஞ்சிபுரத்தில் இருக்கும் லோக்கல் பொதுமக்கள் கோர்ட் படி ஏறினாலும் ஏறலாம். தினம்தினம் படுகின்ற அவஸ்தை அவர்களுக்குத்தான் தெரியும்....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சமய பெருமக்கள் ஸம்பந்தப்பட்டா ஆன்மீக பெருமக்கள் கூடி அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இன்னமும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு தரிசன வாய்ப்பு அமையப்பெறவில்லை. உலக மக்களுக்காக விஷத்தை உண்ட நீலகண்டன், யாகத்தின் தீ ஜுவாலையை தாங்கி கொண்ட வரதன், தனது பக்தர்களுக்காக மேலும்பசில காலம் தரிசனம் தருவதற்கு மறுக்கவா போகிறார்? கலியுக வரதன் பக்தர்கள் வருவதால் மனம் குளிர்ந்து உலகத்தை ரட்சிக்கவே பேருவகை கொண்டிருப்பார் என்பது திண்ணம். நந்தனாருக்கு நந்தியே தலைசாய்த்து வழிவிட்டது, முதலாளிதானே மறுப்பு சொன்னது தடை செய்தது. பக்தர்களின் கோரிக்கைகளை கோவில் பட்டாச்சாரியார்களும் அறநிலையத்துறையும் நிறைவேற்ற வேண்டும்.

  • jagan - Chennai,இந்தியா

   அத்தி பல வருடங்களாய் குளத்தில் தான் இருந்தார். எப்போ நாங்க கஞ்சி கோவில் போனாலும், குளத்தை சேவித்து ஒரு பிரதக்ஷணம் செய்வோம்....எல்லோருக்கும் தெரியும் அத்தி அங்கே தான் இருக்கிறார்/இருப்பர் என்று அப்புறம் ஏன் இந்த அலம்பல்....அத்தி முகம் நமக்கு தெரியும், குளத்தில் எப்போதும் வாசம், கூட்டம் இல்லாமல் எப்போ வேண்டுமானாலும் சேவிக்கலாம் ....

 • Girija - Chennai,இந்தியா

  மிகவும் வருந்தத்தக்க விஷயம், அவ்வளவு நேரம் நின்று பக்தியுடன் தரிசனம் செய்யும் இந்த மக்கள் டி வீ கேமராவை கண்டதும் எதோ பொழுதுபோக்கு இடத்தில இருப்பது போல் கை அசைப்பதும், தரிசனம் செய்யும் போதே அத்திவரதரை மொபைலில் வீடியோ எடுப்பதும் கேவலமாக இருக்கிறது? நீங்கள் உங்கள் நலுனுக்கு பிரார்த்தனையாக அத்திவரதரை தரிசிக்க சென்றீர்களா அல்லது ஷோ பண்ண சென்றீர்களா? கேவலமாக உள்ளது. இதையெல்லாம் செய்ய வண்டலூர் ஜூ உள்ளதே?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   உண்மையான பக்தி உள்ளவர்கள் என்று வடிகட்டினால் நூற்றுக்கு நான்கைந்து பேர் தீருவார்கள் ......

 • Yezdi K Damo - Chennai,இந்தியா

  அத்திவரதர் பாவம் "ஆடு ராமா ஆடு ' ரேஞ்சுக்கு வந்துட்டார்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   அனைத்தையும் அவன் ஆட்டுவிக்கிறான் ........ நமது குடல் கூட நாம் கட்டளையிட்டு ஜீரணம் செய்வதில்லையே ?? மாற்றுமத அன்பர்கள் இதில் புகுந்து குசும்பு செய்யத் தேவையில்லை ........

 • Annamalai Nagappa - CHENNAI,இந்தியா

  நீட்டிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நிரந்தரமாக ஒரு புதிய சந்நிதி அல்லது ஒரு புதிய கோவில் கட்டி அங்கு அத்திவரதரை பிரதிஷ்டை செய்தால் அந்த கருத்தை பரிசீலிக்கலாம்.

 • ரமேஷ் -

  கடவுளுக்கு நாம் தான் காத்திருக்க வேண்டும்..... கடவுள் என்றும் நமக்காக காத்திருக்க வேண்டாம்.....300 வருட மரபு மாறவேண்டாம்....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஊழலும் லஞ்சமும் பொய்யும் பேசி திரியும் எவனுக்கும் வரதர் அருள் கிடைக்காது.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கோவில்கள் வியாபாரமாக்கப்படுகிறது , இது வேறு மதத்தில் உள்ளதா ??? இறைவன் அனைவருக்கும் பொதுவானவர்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  உள்ளூரில் ஒழுங்காக கோவில் போகாதவர்கள் எல்லாம் காஞ்சிபுரத்தில் குவிகிறார்கள் , நானும் அத்திவரதரை தரிசனம் செய்தேன் என்று சொல்லி கொள்ள

 • loganathan - Chennai,இந்தியா

  அத்திவரதர் நீரினுள் கொண்டு சென்றாலும் வாட்டர் வேர்ல்ட் போல குளத்தை மேம்படுத்தி அத்திவரதர் தரிசனம் மேற்கொள்ள வைக்கலாம். ஆகம விதியும் கெடாமல் அத்திவரதர் நாம் காணலாம். பரிசீலிப்பார்களா?

 • Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா

  அத்தி வரதர் தரிசன வைபவத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நீட்டித்தே ஆகவேண்டும் என்பதே பக்தர்கள் அனைவரின் வேண்டுகோள். நீட்டிப்பு மட்டுமல்ல மீண்டும் திருக்குளத்தில் சயனப்படுத்த வேண்டியதே, இன்றைய காலகட்டத்திற்கு தேவையே இல்லை என்பதை ஜீயர் மகான்கள் செய்தியாகவும் பெரும் கோரிக்கையாகவுமே பலமுறை கூறிவருகின்றனர். அனைத்து மக்களின் எண்ணமும் எதிர்பார்ப்பும் இதுவே. ஆனால் இவ்வளவு மிகப் பெரும் கூட்டைத்தை எதிர்பார்க்கவில்லையோ அல்லது வேறு வகையான மெத்தனப் போக்கிலோ அல்லது திறமையும் சுய அறிவும் இல்லாததினாலோ, எதனால் என்று தெரியவில்லை, பக்தர்களின் சௌகரியத்தை இப்பொழுதுள்ள இக் கூட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றே கூறவேண்டும். முதலில் வெறும் இரண்டு கிலோ மீட்டர்கள் தூரம், கடும் வெயிலில் 5 மணி நேரம் காத்திருந்து சுட்டெரிக்கும் தார் சாலையில் கடக்க வேண்டும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சூரிய பகவான் தனது முழுசக்தியை நிரூபித்தி விடுவார். கால்கள் சிவந்து மரண வேதனை அளித்துவிட்டது. ஒரு பந்தல் போட்டிருந்தாலோ அல்லது திருப்பதி பிரகாரத்தில் உள்ளது போல் ரோட்டில் சுண்ணாம்பு அடித்திருந்தாலோ கூட இவ்வளவு கால் சூடு துன்புறுத்தி இருக்காது. கோவிலின் பிரகாரத்தை அடையும் வரை பக்தர்களுக்கு எந்தவித சௌகரியமும் துளியும் இல்லை. (இரண்டு இடங்களில் தனியார் குழுக்கள் அன்னதானம் அளித்தார்கள், இல்லை என்று சொல்லவில்லை.) இதில் மேலும் ஒரு படியாக தடை தாண்டுதல் போட்டியாளர்கள் போல ஒர் இடத்தில் குனிந்து செல்ல வேண்டும், ஒர் இடத்தில் குதித்துச் செல்ல வேண்டும், நடுவில் ஓடி ஓடிச் செல்ல வேண்டும். அப்பப்பா, அத்தி வரதர் தன் பவரைத் தெளிவாகக் காட்டிவிட்டார். ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் எல்லாம் வெற்றிகரமாக முடித்து கோவிலின் முதல் பிரகாரத்தை அடைந்தவுடன் தான் இருக்கிறது உங்களின் உடல்திறன், மனோபலம், வில்பவர் அனைத்தையும் ஒருங்கே சோதிக்கும் ஒரு மிகக் கொடிய சவால். அதுதான் 20 க்கும் மேற்பட்ட ஜிக்ஜாக் பாதை. கீழே மண்ணிருந்தாலும் பரவாயில்லை, ஓரளவு நடந்து விடலாம். சிறு பொடி கற்கள். ஏற்கனவே கடும் வெயிலில் தார் ரோட்டில் நடந்து கால் பாதம் சிவந்து, கொப்பளித்திருக்கும் நிலையில் இந்த கல்பாதையில் ஏறக்குறைய இரண்டரை கிலோமீட்டர் தொலைவு நிற்காமல் நடக்க வேண்டும். நின்றால் பின்னால் வரும் ஆந்திரா கோஷ்டி தள்ளிக் கொண்டே செல்வார்கள். மரண வேதனையின் உச்சம். மேலும் இதில் மகாபாவம் 10-12 வயதுள்ள சிறுவர் சிறுமியர். இவர்களை இடுப்பிலோ தோளிலோ தூக்கிச் செல்லவும் முடியாது, கனமாக இருப்பார்கள், அவர்களால் நடக்கவும் முடியாத சூழல், ஒற்றைகாலைத் தூக்கி வைத்துக் கொண்டு குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கும் பொழுது, இதயத்தில் ரத்தம் வடிகிறது. இவ்வளவு மோசமான ஏற்பாட்டைச் செய்த அதிகாரிகளே இவை அனைத்திற்கும், இத்துணை துன்பத்திற்கும் மூல காரணம். சிறிதும் அறிவில்லாத, திறமை என்றால் என்னவென்றே அறியாத, எதர்க்கும் லாயக்கே இல்லாத அதிகாரிகள் மட்டுமே முழு காரணம், இவர்களே இம் மகத்தான வைபவத்தில் ஏற்பட்ட பலவிபத்துகளுக்கும் முழு பொறுப்பு. நாம் இவ்வளவு பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டுமென மனதார நினைத்தாலும், இந்தத் திறமையும், சமாளிக்க திராணியுமற்ற வெத்துவேட்டு அதிகாரிகள், நீட்டிற்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இம்மகத்தான வைபவத்தை முடிவுக்குக் கொண்டுவரவே முயற்சிப்பார்கள். ஒன்றுக்கும் லாயக்கற்ற அதிகாரிகாளால் வேறு எதுவும் ஆக்கப்பூர்வமாக நிணைக்க முடியாது, இவர்களுக்கு அதுவெல்லாம் தெரியவும் தெரியாது.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  @Mr. Rajkumar, Thanjore, - renovation of old temple is differ from this. It is not a renovation. If you don't know any thing please keep mum. How can you correlate the renovation of temple with Sri Athi Varadhar darshan? Don't try to make others concussion. The culture, concept, belief should follow by us

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  அந்தகாலத்திய 1939 , 1979 ஆண்டுகளில் மக்கள் ஜனத்தொகைக்கு 48 நாட்கள் போதுமானதாக இருந்திருக்கும். இப்போது வாட்சப், முகநூல் என தகவல் தொடர்பு விரிவடைந்துள்ள காலகட்டத்தில் 108 நாட்கள் கூட போதாது. நீதிமன்றமே அத்திவரதரை தனி சன்னதியில் நித்ய சேவை சாதிக்குமாறு உத்திரவிடலாம். நேற்று தரிசனத்தில் வி ஐ பி வரிசையில் பக்தர்களுக்குள் அடிதடி நடந்து பலத்த காயம் அடைந்துள்ளார்கள் சுமார் 40 பேருக்கு மேல் மயக்கம் என செய்திகள் வந்துள்ளது. போலீஸ் காவலர்கள் தக்க சமயத்தில் மயங்கியவர்களை அப்புறப்படுத்தி முதல் உதவி செய்துள்ளார்கள் காவலர்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளதாக பக்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் திருவாலங்காடு உதவி ஆய்வாளரை மிக கேவலமாக ஒருமையில் மட்டுமன்றி அசிங்கமாக திட்டியதை ஊடகங்களில் பார்த்தபோது மிகவும் வேதனையாக உள்ளது. அன்று சுப்ரமணியம் ஸ்வாமி வி ஐ பி வரிசையில் சிக்கிக்கொண்டதால் அவர் புகார் அளித்ததால் அங்கு பணியில் இருந்த அந்த போலீஸ் காவலர் மிக அதிகமாக வசவு வாங்கியது பரிதாபத்திற்குரியது. இந்த அத்திவரதர் வைபவத்தை சரியாக கைய்யாளததற்கு அந்த மாவட்ட ஆட்சியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அத்திவரதர் பிரபலமாவது மத வியாபாரத்துக்குத் தடையாக உள்ளது .... விஷநரிகள் கொதிக்கிறார்கள் ...........

 • s t rajan - chennai,இந்தியா

  let us not change our traditions n pratices - whether it is Sabarimala oe Kanchipuram or other places of worship.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  365 நாளும் தரிசனம் தரலாம். சிறப்பு தரிசனம் ஒழிக்க பட வேண்டும்.. திருசெந்தூர் கோவிலில் நடக்கும் சிறப்பு தரிசன கொடுமையை நிறுத்தினால் நன்றாக இருக்கும். கடந்த முறை நான் 7 மணிநேரம் நின்றேன் 100 ரூபாய் செலுத்தி சிறப்பு தர்சனத்திற்காக. கோவில் அர்ச்சர்கள் பணம் பிடுங்கும் ஓநாயக அலைகிறார்கள்

 • Thirumal Kumaresan - singapore,இந்தியா

  அரசும் ஹிந்து பெரியோர்களும் சேர்ந்து முடிவெடுக்கலாம்.தேவை இல்லாமல் கோர்ட்டுக்கு போகவேண்டியதில்லை.கோர்ட்டுக்கு போனால் விவாத பொருளாகிறது. இதை தவிர்க்க வேண்டும்.

 • rajj - Thanjavur,இந்தியா

  எத்தனையோ சிதிலமடைந்து இருக்கும் கோயில்களை புதுப்பிக்கிறோம். அது போல் நினைத்து இவரையும் நிரந்தரமாக இருக்கசெய்து வழிபடலாம் இதனை மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செய்யலாம்

 • rajj - Thanjavur,இந்தியா

  கண்டிப்பாக நீட்டிக்கலாம். அனைத்து மக்களும் அத்திவரதரின் அருள் கிடைக்கப் பெறவேண்டும். சிலர் வேண்டுமென்றே தேவையில்லாத கருத்துக்களை கூறலாம் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து கண்டிப்பாக நீட்டிக்கலாம். அந்த காலத்தில் சூழ்நிலை கருதி அத்திவரதரை அனந்த சரஸ் செய்யப்பட்டு இருக்கலாம். ஆகம விதி என்பது என்னைப்பொறுத்த வரையில் அனைத்து மக்களின் நலன்/விருப்பம் கருதி அவரை நிரந்தரமாகவே புதிதாக தனி சன்னதி அமைத்து வழிபடலாம் கண்டிப்பாக இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை நம்மால் விரும்பி கும்பிடப்படும் எந்த சாமியும் நமக்கு நன்மையே தரும்.

  • RK NATARAJ - madurai ,இந்தியா

   அத்தி வரதா தயவு செய்து நீ குளத்திற்குள் போக வேண்டாம். இங்கு மனிதர்கள் செய்யும் பாபச்செயலை பார்க்க வேண்டும். ஒரு வேளை பார்க்க கூடாது என்பற்காகத்தான் போகிறாயா? காபீ, டீ சாப்பிடுவது போல் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சர்வ சாதாரணமா நடக்கிறது. போலீஸ் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால், திரும்பவும் அதே நிலை உருவாகிறது. பயம் இல்லை. குற்றவாளிகள் முன்பு நடுத்தெருவில் அடித்து இழுத்து வருவார்கள். முழு பொறுப்பும் நீதித்துறை,அரசாங்கம், மற்றும் போலீஸ் துறையே சாரும். தீர்ப்புகள் காலதாமதம் ஒரு காரணம். நீதி மன்றங்களில் சரியான முறையில் சாட்சிகள் இல்லாததால் , நிரூபிக்க முடியாதலால் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்.

 • jagadesh - chennai,இந்தியா

  மக்களின் பாதுகாப்பு ,சுகாதாரம்,பயணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த அங்கு நிர்வாகம் போராடிக்கொண்டிருக்கின்றது இதில் கால நீடிப்பா? வேண்டவே வேண்டாம் .

  • Srinivasan Desikan - chennai,இந்தியா

   ​சென்ற வருடம் உ​டைந்த முக்​​கொம்பு அ​ணை​யை ​நேற்றுவ​ரை பணிமுடிக்காமல் இருக்கும் இவர்கள். ​கையாலாக அரசாங்கம்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   @ஸ்ரீநிவாசன் தேசிகன், உண்மையில் அணை உடைந்ததா ? மதகுகள் உடைந்தனவா ?? எது உடைந்தது என்று தெரியாமலேயே அரசைக் குற்றம் சொல்ல வேண்டியது

 • Sudarsanr - Muscat,ஓமன்

  மரபுகளை மீறாமல் இருப்பதே நல்லது..

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

   மரபு என்பது அந்த காலத்தில் சூழ்நிலை தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டது.....

 • RSaminathan - Thirumangalam - Abu Dhabi,இந்தியா

  செம பிசினெஸ் ஐடியா.

 • ramtest - Bangalore,இந்தியா

  வேண்டவே வேண்டாம் ... இப்பவே தினமும் லட்சக்கணக்கில் மக்கள் வருகையால் காஞ்சிபுரம் சுகாதார கேட்டை நோக்கி போய் கொண்டிருக்கின்றது....

Advertisement