Advertisement

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரிய வழக்கில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது. மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால், இதில், மத்திய அரசுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், அங்கு, துணை ராணுவப் படைகள் கூடுத லாக குவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில், 144 தடை உத்தரவும், சில இடங்களில், ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.

இயல்பு நிலை:



ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டுகளை எதிர்த்து, காங்.,கைச் சேர்ந்த தஹ்சீன் புனேவாலா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அமர்வின் கேள்விக்கு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:


ஜம்மு - காஷ்மீரில், 2016ல், பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டபோது, அங்கு பல போராட்டங்கள் நடந்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மூன்று மாதங்களுக்கு மேலானது. அப்போது நடந்த வன்முறைகளில், 47 பேர் உயிரிழந்தனர்.

44 ஆயிரம் பேர்:



மேலும், 1990ல் இருந்து இதுவரை, 44 ஆயிரம் மக்கள், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த சிலருக்கு, அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகள் வருகின்றன. ஜம்மு - காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பதே, அரசின் முதல் இலக்கு. அதனால் தான், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அங்கு பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படவில்லை; எவரும் உயிரிழக்கவில்லை.


நிலைமையை தினமும் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து அறிக்கை பெற்று, கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீர் முழுவதும் அமைதி திரும்பும் வரை, இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும். அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கு, மேலும் சில நாட்களாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

அவசர கதி:



அதைத் தொடர்ந்து, அமர்வு கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்னை. தற்போது அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. 'அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கு, சிறிது காலமாகும்; தினமும் நிலைமை ஆய்வு செய்யப்படுகிறது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்துவது தான், மத்திய அரசின் முக்கியமான பணி. அங்கு, ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பர். அதனால், மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.


இந்த வழக்கில், என்ன நிவாரணம் வேண்டும் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஏதோ அவசர கதியில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், எந்த உத்தரவையும் இதில் பிறப்பிக்க முடியாது. வழக்கின் விசாரணை, இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, அமர்வு கூறியது.

காஷ்மீர் பத்திரிகை வழக்கு:



ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, அங்கிருந்து வெளியாகும், 'காஷ்மீர் டைம்ஸ்' என்ற, ஆங்கில நாளிதழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, நீதிபதி, அருண் மிஸ்ரா தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, பதிவாளரிடம் மனு கொடுக்கும்படி அமர்வு கூறியது. காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர், அனுராதா பாஷின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தொலை தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளால், எங்களுடைய செய்தியாளர்களால் வெளியே செல்ல முடியவில்லை; செய்தி சேகரிக்க முடியவில்லை. உடனடியாக இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்'



ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்தின் முதன்மை செயலர், ரோஹித் கன்சால், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஜம்மு பிராந்தியத்தில், கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், காஷ்மீரின் சில பகுதிகளில், கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. சுதந்திர தினத்துக்கான முழுஒத்திகை அணிவகுப்புக்குப் பிறகு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும். சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8 + 5)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    வழக்கு தள்ளுபடி செய்ய வக்கில்லை???? பேச்சு மட்டும் நீளுது

  • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

    காஷ்மீர் டைம்ஸ்...காஷ்மீருக்கே நேரம் சரியில்ல...என்ன ஒரு காமெடி நீ செய்தி கலெக்ட் பண்றதுக்காக தடையுத்தரவை வாபஸ் பெறணுமா? உன்னயெல்லாம் பீரங்கி முனையிலே கட்டிவெச்சு பீரங்கியால் சுடனும்...

  • PANDA PANDI - Aththipatti,இந்தியா

    365x144 JK மக்கள் HAPPIEST STATE OF INDIA. இப்படி ஒரு சர்வே விடுவார்கள் விரைவில்.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    காங்கிரஸ் கட்சியின் வருமானம் பாதிக்கிறது.......

  • RajanRajan - kerala,இந்தியா

    மொத்த காங்கிரஸ் கட்சியும் இப்போ அவசர கதியில் தானே இயங்கி கொண்டிருக்கிறது. இத்தனை காலம் கட்டி காத்த காஸ்மீர் தீவிரவாதத்தை பாதுகாக்க. காஸ்மீர் அமைதி பாதைக்கு திரும்புவதை காங்கிரஸ் வாதிகள் விரும்ப வில்லை எண்பத்து மிக தெளிவாக இந்த வழக்கு தொடுத்ததன் மூலம் மக்களுக்கு தெரிகிறது

காஷ்மீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு (4)

  • Thirumal Kumaresan - singapore,இந்தியா

    தள்ளுபடி செய்வதே சிறப்பு

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    வழக்கு தொடுத்த இருவரையும் பிஓ கே பகுதிக்குள் தனியாக அனுப்ப நீதி அரசர்கள் உத்தரவு போடலாம்.

  • Thirumal Kumaresan - singapore,இந்தியா

    இது தேவையற்றது. தள்ளுபடி செய்வதே சிறப்பு

  • Gopalsami.N - chennai,இந்தியா

    விசாரணையும் தீர்ப்பும்பொதுவானதாக இருப்பது arasiyal தேவை.

Advertisement